Tuesday, July 7, 2009

நோர்வேயில் மக்களைக் குழப்பும் நடவடிக்கையில் ஒரு சில விசமிகள்.

கடந்த பல வருடங்களாக ஒழுக்கவீனம் காரணமாக விடுதலைப்புலிகள் இயக்கத்திலிருந்து ஒதுக்கிவைக்கப்பட்டிருந்த ஒரு நபரின் தலைமையில் சில நபர்கள் தங்களைத் தேசப்பற்றாளர்கள் எனக் காட்டிக்கொள்வதற்காக கே.பியின் ஆதரவாளர்கள் என்ற போர்வையில் இயங்கத்தொடங்கியுள்ளனர். இவர்கள் இரகசியமாகப் பல ஒன்றுகூடல்களை நோர்வேத் தலைநகரம் ஒஸ்லோவில் நடத்தியுள்ளதாக எமது நோர்வே நிருபர் தெரிவித்துள்ளார்.

சமாதான காலத்தின் பின்னர் ஏற்படுத்தப்பட்ட நிர்வாக ஓழுங்கில் பழைய நிர்வாகத்தின் "தில்லுமுல்லு"கள் கண்டுபிடிக்கப்பட்டு அவற்றை சீர்செய்த போதும் சம்பந்தப்பட்டவர்களை இயக்கம் விலக்காது பணிகளை தொடர கேட்டபோதும் தந்திரமாக விலகிக் கொண்ட இந்த விசமிகள் இவ்வளவு நாள் இடைவெளிக்குப்பின்னர் தற்போது தலைகாட்டியிருப்பது "பூனையில்லா வீட்டில் எலி துள்ளி விளையாடுவது" போல் உள்ளது.
இப்படியான பொறுப்பற்ற செயல்கள் விரக்தியில் இருக்கும் மக்களை மேலும் குழப்புவதாகவுள்ளதாக பலர் கருதுகின்றனர்.

இவர்களுக்கு ஏன் இந்த வேலை? நேர்மையாக விடுதலை இயக்கத்திற்காக வேலைசெய்யாமல் தங்களை சமுதாயத்தில் ஒரு பிரமுகர்களாக அடையாளப்படுத்த விரும்பும் இப்படியான முன்னாள் பொறுப்பாளர்களின் (விசமிகள்) பொறுப்பற்ற செயல் என்றைக்குமே மக்களால் ஏற்றுக்கொள்ளப்படப்போவதில்லை.

ஒன்றுபட்டு எமது தேசத்தின் விடிவிற்காய்ப் போராடவேண்டிய இந்தத் தருணத்தில் இவர்கள் தமிழ் சமுதாயத்தையே இரண்டுபட வைக்கின்றனர். நான்கு சுவருக்குள் இருந்து தன்னை தலைவராக பிரகடனப்படுத்தியிருக்கும் குமரன் பத்மநாதனின் அறிக்கைகளையே ஏற்றுக்கொள்ளாத தமிழ்மக்கள் இவர்களையா ஏற்றுக்கொள்ளப்போகின்றார்கள். குமரன் பத்மநாதன் எப்படியெல்லாம் இந்திய உளவுத்துறைக்கு விலை போனாரோ அதே போல் இவர்களும் விலைபோய்விட்டார்கள் என்பது ஏற்கனவே தலமைக்கு தெரியும். மெற்கூறப்பட்ட விசமிகள் அல்லது துரோகிகள் முன்னர் இதே கே.பிக்கு கீழே பணிபுரிந்தவர்கள் தான்.

இன்றைய காலகட்டத்தைப் புரிந்து கொண்டு நாம் அனைவரும் ஒன்றுபட்டு எமது தேசத்தையும் வதைமுகாம்களில் சிக்கிச் சித்திரவதைப்படும் எமது மக்களையும் மீட்டெடுப்பதே புத்திசாலித்தனமாகும். தலைவர் மறைந்துவிட்டார் என்று சொல்லிக்கொண்டு தலைமைப் பதவியை தக்கவைக்க ஒருசிலர் முயற்சிக்கின்றார்கள். இதுதான் சந்தர்ப்பம் இவர்களுடன் ஒட்டிக்கொள்வோம் என நினைக்கும் இந்த நபர்களை நினைத்தால் இரத்தம் கொதிக்கின்றது. இவர்கள் எல்லாம் தலைவர் அவர்களுக்கு விசுவாசமாக பணிபுரிந்தவர்களா?
தேவை ஏற்படும் பட்சத்தில் இந்த நபர்களின் பெயர்களையும் நாம் வெளியிடத்தயங்கமாட்டோம். இன்று நாம் கேட்பதெல்லாம் யாராக இருந்தாலும் தயவுசெய்து மக்களைக் குழப்பவேண்டாம். இந்த நபர்கள் உடனடியாக தங்கள் அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்தவேண்டும்.

தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவில் பணியாற்றிய ஒரு சிலரும் இவர்களுடன் சேர்ந்து பொறுப்பற்றதனமாக நடந்துகொள்வதை நினைக்கும்போது நெஞ்சம்பொறுக்குதில்லை. தங்களின் பதவிகள் போனதும் மற்றவர்களைக் கவிழ்ப்பதிலே குறியாக இருக்கும் இவர்களா எமது தேசத்தின் விடிவிற்காக நேர்மையாக உழைக்கப்போகின்றார்கள்? இவர்களை என்றுமே மன்னிக்க முடியாது. இவர்களுக்கும் டக்ளஸ், சித்தார்த்தன், கருணா, பிள்ளையான் போன்றோருக்கும் என்ன வித்தியாசம். சிந்தியுங்கள். தமிழ் சமூகத்தைப் பிரிக்காதீர்கள்.
தலைவரின் சிந்தனையுடன் புலிக்கொடிக்குக் கீழ் ஒன்றுபடுங்கள். கருத்து வேற்றுமைகள் இருந்தால் பேசித்தீர்த்துக்கொள்ளுங்கள்.
ஒன்றுபடுங்கள் ஒற்றுமையாய்ப் போராடுங்கள்!

நன்றி

நோர்வேயிலிருந்து எமது நிருபர் "சங்கிலியன்"

----------

No comments:

Post a Comment