Friday, May 15, 2009

படையினரின் உக்கிர தாக்குதல்கள்: மக்கள் பாதுகாப்பு வலயம் புகைமண்டலமாக காட்சியளிக்கிறது


வன்னியில் சிறீலங்கா படையினர் மிகக் கடுமையான தாக்குதலை ஆரம்பித்திருப்பதாக அங்கிருத்து கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர் எறிகணை மற்றும் பீரங்கித் தாக்குதல்களை மேற்கொண்டு வந்த படையினர், இன்று காலை முதல் தமது முழுமையான படைக்கல சக்தியைப் பயன்படுத்தி பாதுகாப்பு வலயம் நோக்கி கடுமையான தாக்குதலை ஆரம்பித்துள்ளனர்.

மக்கள் பாதுகாப்பு வலயம் ஒரே புகை மண்டலமாகக் காட்சியளிக்கிறது

இதனால் ஒரு இலட்சத்து 65 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் பாரிய மனித அழிவை எதிர்நோக்கியுள்ளனர்.

சிறிலங்காவின் இனப்படுகொலைத் தாக்குதலில் 24 மணி நேரத்தில் 1700 பேர் பலி

வன்னியில் கடந்த 24 மணி நேரத்திற்குள் தமிழ் மக்கள் ஆயிரத்து 700 பேர் வரையில் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன், மூவாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

சிறீலங்கா படையினர் தொடர்ச்சியான இனவழிப்புத் தாக்குதலை மேற்கொண்டுவரும் நிலையில், நேற்று மாலை முதல் இன்று மாலைவரை இவ்வளவு தொகையான மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

கொல்லப்பட்ட மக்களின் உடலங்கள் வீதிகள், மற்றும் அவர்களின் வாழ்விடங்களில் சிதறிக்கிடக்கின்றன.

முள்ளிவாய்க்காலில் இயங்கிய ஒரேயொரு மருத்துமனையும் படையினரது தாக்குதலில் இயங்க முடியாது செயலிழந்துள்ள நிலையில், படுகாயமடைந்த மக்கள் குருதி இழப்பினால் மரண அவலத்திற்குள் தள்ளப்பட்டுள்ளனர்.

Thursday, May 14, 2009

சிறிலங்கா இரசாயணத் தாக்குதலுக்குத் தயாராகின்றது

சிறிலங்கா இராணுவம் இரசாயணத் தாக்குதலுக்கு தயாராவதாக தெரியவருகின்றது. கடந்த சில மாதாங்களாக மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கையில் பெரும் வெற்றிகளைப் பெற்றுக்கொள்ள முடியாது திணறும் சிறிலங்கா இராணுவம் பொது மக்கள் மீது மீண்டும் ஒரு இரசாயணத் தாக்குதலை இன்று அல்லது நாளை மேற்கொள்ளக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அவ்வாறான தாக்குதல் ஒன்றுக்கு படையினர் முற்பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து வருவதாகவும் களமுனைச் செய்திகள் உறுதிப்படுத்துகின்றன. இத்தாக்குதலுக்கு முன்னேற்பாடாக இவ்வாறான ஒரு தாக்குதலை பொது மக்கள் மீதும் இராணுவத்தினர் மீதும் விடுதலைப் புலிகள் மேற்கொள்ளப்போவதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சகம் செய்தியொன்றை பரவவிட்டுள்ளது.

இதன் மூலம் விடுதலைப் புலிகளே இவ்வாறான தாக்குதலை நடத்தியதாக கூற முனைவதுடன், பெரும் இன அழிப்பொன்றை மேற்கொள்ளவும் படையினர் தாயாராகி வருகின்றனர். கடந்த மாதம் இவ்வாறான ஒரு இரசாயணத் தாக்குதலை மேற்கொண்டு பெரும் அழிவைப் படையினர் ஏற்படுத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, இந்த அழிவினைத் தடுத்து நிறுத்த புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் காத்திரமான பங்களிப்பை வழங்கவேண்டும் எனவும், சிறிலங்காவின் இந்தப் படுகொலையை உடனடியாகத் தடுத்து நிறுத்த மக்கள் வீதிகளில் இறங்கிப் போராட முன்வரவேண்டும் சிறிலங்காவின் போரியல் சட்ட விதிகளுக்கு முரணாக பாவிக்கப்படும் தடை செய்யப்பட்ட ஆயுதப் பாவனைகளுக்கு எதிராக புலம்பெயர்ந்த மக்கள் கிளர்ந்தெழுந்து போராட வேண்டும். அதுவே இந்த மோசமான இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்தும்.

பிரான்ஸ்வாழ் தமிழ் மக்களே! உடனே ஒன்று கூடுங்கள்

பிரான்சில் பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் மக்கள் எழுச்சிப்போராட்டம் 39வது நாளாகத் தொடர்கின்றது. எனவே அனைத்து மக்களும் தொடர்ச்சியாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
வன்னியில் நிலவும் மிகமோசமான நிலையினால் புலம்பெயர் வாழ் தமிழர்கள் எந்த இடையூறு வந்தாலும் தொடர்ச்சியாகப் போராட வேண்டியுள்ளதால் பிரான்சில் மக்கள் எழுச்சிப்போராட்டம் முழு வீச்சுடனும் வேகத்துடனும் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

பிரான்சில் தமிழ் மக்களின் வர்த்தக நிலையங்கள் அமைந்துள்ள லா சப்பல் பகுதில் இப்போராட்டம் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியல் இப்போராட்டம் நடைபெறுவதால் மக்கள் இடமாற்றம் பற்றிய தகவல்களை அவதானித்து போராட்டங்களில் பங்குபற்ற வேண்டும் எனக்கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

அதே வேளை பிரான்சில் நடைபெறவிருந்த தமிழீழப்பரகடனத்திற்கான வாக்குப்பதிவு தவிர்க்க முடியாத காரணங்களால் பிற்போடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்டுள்ளது. மேலும் இது பற்றிய செய்தி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.

Wednesday, May 13, 2009

சிறிலங்கா உடனடியாக யுத்தத்தை நிறுத்தவேண்டும்: ஓபாமா அழைப்பு


வன்முறையை நிறுத்தி பொதுமக்களின் வேதனைகளை நீக்குமாறு சிறிலங்காவுக்கு அமெரிக்கா ஜனாதிபதி, பாராக் ஓபாமா அழைப்பு விடுத்துள்ளார்.

பல நூற்றுக்கணக்கான பொது மக்களைக் கொல்லும் சிறிலங்கா இராணுவத்தின் கண்மூடித்தனமான தாக்குதல்களை நிறுத்துமாறும் மற்றும் ஐ.நா. மனிதாபிமான பணிக் குழுவை மக்களின் இடங்களுக்குச் செல்ல அனுமதி தருமாறும் சிறிலங்கா அரசுக்கு ஓபாமா அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும், தமிழீழ விடுதலைப் புலிகளிடம் ஆயுதங்களைக் கீழே போடுமாறும், மக்களை வெளியேறவிடுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இவற்றைக்கூறிய ஓபாமா தமிழருக்குரிய தனி நாட்டுக்கான பொறுப்பை எடுக்க தயாரா என்றும் மற்றும் அவர்களின் சுதந்திரத்துக்கும், நம்பிக்கைக்கும் முழு உத்தரவாதம் தருவாரா எனவும் அமெரிக்க தமிழ் புத்திஜீவிகள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

காணொளி: சிறிலங்கா உடனடியாக யுத்தத்தை நிறுத்தவேண்டும்: ஓபாமா அழைப்பு

மனித உரிமைக் கண்காணிப்பகம் சாட்சி கூறும் முள்ளிவாய்க்கால் படுகொலைகள்


அமெரிக்காவை தளமாக கொண்டு இயங்கும் மனித உரிமை கண்காணிப்பகம் (HRW) மே மாதம் 6ம் திகதி 9, மற்றும் 10ம் திகதி முள்ளிவாய்க்கால் பகுதியை தனியார் செயற்கைக் கோள் நிறுவனத்தின் உதவியுடன் புகைப்படம் எடுத்துள்ளது.
இதன் விபரங்கள் இன்று 13.05.2009 வெளியிடப்பட்டுள்ளது. இதில் மக்கள் செறிந்து வாழும் பகுதிகள் மீது இலங்கை இராணுவம் கடும் ஆட்டிலறித் தாக்குதல் மேற்கொண்டிருப்பது தெட்டத் தெளிவாக புலப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. கனரக ஆயுதங்களை தாம் பயன்படுத்தவில்லை எனக் கூறிவரும் இலங்கை அரசுக்கு இன்றைய தினம் அதிர்ச்சி

சமீபத்தில் ஜ.நா எடுத்த புகைப்படங்கள் பெரும் சர்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், இப் புகைப்படங்களையும் அறிக்கைகளையும் மனித உரிமைக் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்க விடையமாகும்.

AAAS என அழைக்கப்படும் அமெரிக்க நவீன விஞ்ஞான அமைப்பு, தமது அதி சக்திவாய்ந்த முப்பரிமான செயற்கைக் கோளை பயன்படுத்தி இந்த புகைப்படங்களை எடுத்துள்ளது. இதில் 6 ம் திகதி மே மாதம் எடுக்கப்பட்ட புகைப்படங்களை 10 ம் திகதி எடுக்கப்பட்ட புகைப்படங்களுடன் ஒப்பிட்டுப்பார்க்கும் போது அங்கு ஏற்பட்டிருக்கும் பேரழிவுகள் துல்லியமாக புலப்படுகிறது.

அத்துடன் 2006 ம் ஆண்டு இப்பகுதியை இந் நிறுவனம் படம் எடுத்துள்ளது, அத்துடன் தற்போது எடுக்கப்பட்ட படங்களுடன் ஒப்பிடும் போது பல அழிவுகளை இவ்விடம் சந்தித்திருப்பதை தாம் உணர முடிவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. எது எப்படி இருப்பினும் கனரக ஆயுதங்களை இலங்கை அரசாங்கம் மக்கள் செறிந்துவாழும் பிரதேசத்தில் தொடர்ச்சியாக பாவித்துவருவதை இந்த செயற்கைக் கோள் புகைப்படங்கள் காட்டுகின்றன.

இவ் அறிக்கையினை முழுமையாய்ப் பார்வையிட