Tuesday, July 14, 2009

"பரபரப்பு" ரிஷி "

பரபரப்பாக" பேசிக்கொண்டிருக்கும் இந்த ரிஷி யார்? ஒரு காலத்தில் காதல் கதைகளை எழுதி தன்னை எழுத்தாளராகக் காட்டிக்கொண்ட இந்த "மகா" எழுத்தாளருக்குப் பின்னால் இருக்கும் மர்ம நபர்கள் யார்..?

ரிஷி யாழ்ப்பாணம் மானிப்பாயின் சுதுமலையைச் சொந்த இடமாகக் கொண்டவர். இவர் சுதுமலையில் இருந்த காலத்தில் காதலிப்பதற்கு கூட பலர் பயந்தார்கள் என்று சொல்லும் அளவிற்கு ஒரு வீரதி வீரனாக சூராதி சூரனாக "பரபரப்பாகத்தான்" இருந்திருக்கின்றார்.

அக்கம் பக்கத்தில் யாராவது காதலித்தால் இவருக்கு கதை கிடைத்துவிடும். அதுவும் நிஜக்கதை. கொழும்பில் இருந்து வெளிவரும் தினபதி பத்திரிகைக்கு அடுத்த வாரமே அந்த நிஜக் காதல் கதை, இவரது கற்பனைகளுடன் இணைந்து பறந்துவிடும். கதையின் நாயகனும், நாயகியும் அந்தக் காதலன் காதலியின் சொந்தப் பெயர்தான். ஆனால், கதையின் முடிவில்தான் சிக்கல்! எழுத்தாளராக தனது பெயரை போடுவதற்கு பதிலாக, அந்தக் கதையில் வரும் உண்மையான காதலனினதோ காதலியினதோ, உறவினரதோ பெயரைப்போட்டு அனுப்பி விடுவார்.

பிறகு என்ன...? பத்திரிகை வெளிவந்து... கதை வெளிவந்து... அந்த காதலர்கள் இருவரின் குடும்பங்களும் வெட்டுக் குத்து என்று போகின்ற அளவிற்கு நிலைமை சென்றுவிடும். சென்றுவிடும் என்ன...? சென்றிருக்கின்றது. கடைசியில் காதலன் - காதலியைப் பிரித்துவைத்த பெருமை இவரைச் சாரும்.

இவ்வாறு மற்றவர்களின் காதல் கதைகளை எழுதி மற்றவர்களை மோதவிட்டு வேடிக்கை பார்த்த இந்த மனிதர் இப்போது வளர்ந்து விட்டார். அதனால், இனங்களை மோதவிட்டு வேடிக்கை பார்த்து மகிழ வெளிக்கிட்டிருக்கின்றார்.

ஆங்கில ஊடகங்களிலும், ஆங்கில நாவல்களில் வெளிவந்த புலனாய்வுக் கதைகளை, கட்டுரைகளை இப்போது தனது பரபரப்புகளில் பெயர், ஊர், நன்றி கூட இல்லாமல் எழுதி வெளியிட்டுக் கொண்டிருக்கும் இவருக்கு யாராவது பெயர், ஊர் கொடுத்தால் பேருதவியாக இருக்கும். தனது சொந்தச் சரக்கு என்று இவர் அடித்துக்கொண்டிருக்கும் தம்பட்டம் கொஞ்சநஞ்சமல்ல. இவரைப் பற்றி இன்னும் விலாவாரியாக எழுதாலாம். இப்போது அதற்கான தேவை எழவில்லை. எனவே, அவற்றை இன்னொரு சந்தர்ப்பத்தில் விலாவாரியாகப் பார்ப்போம். இப்போது இவரது பத்திரிகை குறித்துப் பார்ப்போம்.

புலனாய்வு ரிஷி டட்டடங்க் டுட்டும் டும்டும்..... இசை போட்டு வானொலிகளில் கதை பரப்பியவர். சமாதான காலத்தில் வன்னிக்கு போய் கஸ்ரோவிடம் கதை அளந்துவிட்டு வந்து தொடங்கியதுதான் இந்தப் "பரபரப்பு". தொடங்கப்பட்டது அங்கிருந்து வந்துதான். ஆனால், தொடங்கியதன் நோக்கம் வேறானது. "கவர் ஸ்டோறி"யில் புலிகளின் படங்களை பிரமாண்டமாகப் போட்டு தன்னை புலிகளின் முகவராக இவர் அடையாளம் காட்டிக்கொண்டாலும், புலிகளின் பத்திரிகை இதுதான் என்று சிங்கள ஊடகங்கள் சங்கு ஊதும்போதே பலருக்கும் சந்தேகம் வந்துவிட்டது.

அத்திவாரம் போட்டது யாரோ, கட்டடத்தை கட்டிக்கொண்டிருப்பது யாரோ என்று. அப்பப்ப புலியளை நாசூக்காக கிள்ளியும், உச்சந்தலையில் அடித்தும் கொண்டுவந்த ரிஷக்கு, இப்ப புலிகள் இல்லாமால் போனது நல்ல வசதியாய்ப் போய்விட்டது. மெல்ல மெல்ல தன்ரை முகமூடியைக் கழற்றத் தொடங்கியிருக்கிறார்.

புலிகள் தவறுகள் விடுவதாகச் சுட்டிக்காட்டிக்கொண்டும், தன் ஆலோசனை கேட்டிருந்தால் வென்றிருக்கலம் போன்றுமே இவரது கட்டுரைகள் வடிவம் பெறத் தொடங்கியது. புலிகள் தாக்கும்போது தானே கூடச்சென்று தாக்குவது போல் கதை அளப்பதும் புலிகள் பலம் சற்று ஆட்டம் காணும் போது தன் நிஜ எஜமனர்களுக்குத் தன் விசுவாசத்தைக்காட்ட புலிகளின் பலவீனங்கள் என்று அதிமேதாவித் தனமாக தன் புளுகு மூட்டைகளை மக்களிடம் இறக்கிவைத்து உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று சொல்லிக் கொள்வோரின் மூன்றெழுத்து உளவுத்துறைக்கு விசுவாசம் காட்டுவதுமே இவரின் நிஜமான முகமாகும்.

இரண்டு பத்திரிகைகளை இந்தப் புலம்பெயர்ந்த நாட்டில் நடத்துவது எவ்வளவு சிக்கலான விடயம் என்பது பலருக்கு புரியாட்டியும் சிலருக்குப் புரியும். முக்கியமாக இதில் பொருளாதார வளம். விளம்பர வருமானமே இல்லாம பத்திரிகை விற்பனையை மட்டும் நம்பி இந்த உலகில் எந்தப் பெரிய நிறுவனம் கூட நடத்த முடியாதிருக்கும் நிலையில், ரிஷி பத்திரிகையை விற்றுத்தான் பொருளாதாரத்தை பெறுகிறேன் என்று யாருடைய காதிலாவது பூவைச் சுற்றலாம்.

ஆனால், இந்தப் புலம்பெயர்ந்த (ஓசிப் பேப்பரை விரும்பி வாசிக்கும்) மக்களை நம்பி இரண்டு பத்திரிகைகளை வெளியிடுவதற்கு தேவையான நிதியை இவர் எவ்வாறு தொடர்ச்சியாகப் பெறுகின்றார்..? இரண்டு பத்திரிகைகள் நடத்திறதுக்கான செலவையும் அதற்கான வரவையும் கொஞ்ச நேரம் உட்கார்ந்து கூட்டிக் கழித்து கணக்குப் பார்த்தால் உங்களுக்கே மண்டையில் உள்ள மயிர் கொட்டுண்டாலும் ஆச்சரியப்படுறதுக்கில்லை.

ஆனால், அப்படியெல்லாம் மண்டையை விட்டு யோசிக்காதீர்கள். நிதி எங்கிருந்து வருகின்றது. எவ்வாறு வாரம்தோறும் தவறாமல் "பரபரப்பு" தான் சொல்ல வேண்டிய விடயங்களுடன் வெளிவருகின்றது. காரணம் பெரும் பணமுதலை "கே.பி"யும் அதன் பின்னால் உள்ள இந்திய "றோ"வும் தான். தனது தோள் தட்டிப் பேசும் அளவிற்கு "றோ" அதிகாரிகள் தனக்கு நன்கு பழக்கம் என்பதை, தனது விமான புலனாய்வுப் பயணத்தின்போது இந்திய "றோ" அதிகாரிகள் தன்னுடன் நடந்துகொண்ட விதம் குறித்து தன்னை மறந்து இதே ரிஷி சொல்லிப் பெருமைப்படுவதும் உண்டு.

புலிகளின் தாக்குதல் உத்திகளை அற்புதனின் எறிகணைபோல் எழுதும் இவரது ஆக்கங்களில் உள்ள நம்பகத்தன்மையை பலரும் சந்தேகித்தாலும், புலியைப் புகழ்ந்து பேசுவதாக எண்ணி மௌனமாக இருந்துவிடுகின்றார்கள். புலம்பெயர்ந்த மக்களிட்டை ஒரு ஊடகம் நுழையிறதெண்டால் புலி ஆதரவு இல்லாமல் நுழைய முடியாது. அதனால்தான் புலி ஆதரவோடு வெளிக்கிட்ட "பரபரப்பு", இப்போது எங்கே போய்க் கொண்டிருக்கின்றது?

தொடர்ந்தும் பரபரப்போடு இருப்பவர்களுக்கு இது சொல்லாமலேயே புரிந்திருக்கும். இன்னும் "பரபரப்பாக" வரும்.

-------------------------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment