Wednesday, June 24, 2009

குழப்பத்தின் நாயகன் தெய்வீகனும் செய்வதறியாது திணறும் புதினமும்

"செஞ்சோற்றுக் கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா" இப்படி ஒரு வரி கர்ணன் படத்தில் 'உள்ளத்தில் நல்ல உள்ளம்' எனத் தொடங்கும் பாடலில் வருகிறது. இதே நிலைதான் இன்று புதினத்தை நடத்துபவருக்கும் நிகழ்ந்துள்ளது. இவரை சுற்றி இருக்கும் பலரும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு என்ற போலி நிலைப்பாட்டைக் கொண்டிருந்தவர்கள். வெளுத்ததெல்லாம் பால் என்று நம்புகிற இவரும் இவர்களிடம் ஆலோசனை கேட்டே இந்த தளத்தை நடத்தி வருகிறார்.

இப்படி ஆலோசனை வழங்குபவர்களின் கட்டுரையையும் அப்பப்போது தனது தளங்களில் பிரசுரித்து வந்துள்ளார். இவர்களுடன் சுற்றி இருந்த கூட்டமானது விடுதலைப் புலிகள் ஆதரவாளர்களுடன் இருந்தே விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக நடித்து காரியத்தை கச்சிதமாக முடிக்க பகைவனால் அனுப்பப்பட்ட கூட்டம். இவர்களின் கச்சிதாமான நடிப்பை நம்பி இவர்கள் சொல்வதை கேட்டு இணையத்தை நடத்திக் கொண்டிருந்தவருக்கு இப்போதுதான் பிரச்சினை தொடங்கியது. இவ்வளவுகாலமும் அமைதியாக இருந்த கூட்டம் விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டுள்ளார்கள் என்று அரசாங்கம் அறிவித்த உடன் தனது சுயரூபத்ததைக் காட்டத் தொடங்கியது.

இச் சூழலைப் பயன்படுத்தி புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழீழ ஆதரவாளர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி அவர்கள் மனங்களில் தலைவர் அவர்களைப்பற்றி அவர்களிடம் தப்பான அபிப்பிராயத்தை ஏற்படுத்த முயன்றது. அதை எப்படிச் செய்யலாம் என்று யோசித்தபோதுதான் அவர்கள் புதினத்தை பயன்படுத்த முடிவுசெய்தார்கள். அவர்கள் புதினத்தை பயன்படுத்த முடிவு செய்ததற்கு வலுவான காரணம் ஒன்றுள்ளது. அதாவது இவ்வளவு காலமும் விடுதலைப் புலிகளுக்கும் தமிழீழத் தேசியத்தலைவருக்கும் ஆதரவாக இருந்த இணையத்தில் தலைவரைப்பற்றி அவரின் மதிப்பைக் குறைக்கக்கூடிய வகையில் கட்டுரை பிரசுரிக்கப்பட்டால் மக்கள் அதை நம்புவார்கள் என்று நினைத்தார்கள். அதன்படி புதினம் நடத்துபவரிடம் தொடர்பு கொண்டு இந்தக் கட்டுரையை பிரசுரிக்கும்படி கூறியுள்ளனர். இதை பிரசுரிக்காவிட்டால் இந்த தளத்தை நடத்தவிடமாட்டோம் என்று கூறி பிரசுரிக்கச் செய்தார்கள்.

இந்தக்கட்டுரை வழுதி அவர்கள் எழுதியதாகத்தான் நாம் எல்லாம் நினைத்துக் கொண்டுள்ளோம். ஆனால் இந்தக் கட்டுரையை எழுதியவர் வேறு ஒருவர் எனத் தெரியவருகிறது. இவரின் பெயர் தெய்வீகன். இவர் விடுதலைப் புலிகளின் ஆதரவாளனாக தன்னை தமிழ் சமுதாயத்தில் நிலைநிறுத்திக்கொள்ள சகல பிரயத்தனங்களும் செய்து ஒருவிதத்தில் அதில் வெற்றியும் அடைந்தவர். ஈபிடிபி ஆதரவாளரான இவர் அவர்களின் பணிப்பின்பேரில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளனாக நடிக்கத் தொடங்கினார். அதன் ஒருகட்டமாக விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான பத்திரிகைகளான உதயன் மற்றும் வீரகேசரிப் பத்திரிகையில் இணைந்து பணிபுரிந்துவிட்டு வெளிநாடு ஒன்றுக்குச் சென்று அங்கே இருந்து செயற்பட்டுருகிறார்.இவரின் மாமனார் ஈபிடிபியில் ஒரு முக்கியமான நபர்.

அவரின் கட்டளையின்படியே இவர் அனைத்துவேலைகளையும் செய்துகொண்டிருக்கிறார். இவருக்கு கொடுக்கப்பட்ட இரண்டு முக்கியபணிகள். அதில் ஒன்று தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான அமைப்புக்குள் ஊடுருவி அந்த அமைப்பின் தலைமைப் பொறுப்பை பெற்று அந்த அமைப்பை ஈபிடிபிக்கு ஆதரவாக செயற்படவைப்பது மற்றொன்று புலி ஆதரவு ஊடகங்களை தங்கள் பக்கம் இழுப்பது.இதில் முதலாவது வேலைத்திட்டத்தில் மும்முரமாக இறங்கிய இவர் சில இளைஞர்களை சேர்த்துக்கொண்டு அந்தமைப்பினர் விவேகமாக வேகமாக செயற்படவிலலை என்று காரணம் கூறி அமைப்பின் தலைவர் பதவியை கைப்பற்ற முயன்றார். இவரின் சுயரூபம் தெரிந்தவுடன் இவருக்கு ஆதரவாக இருந்த இளைஞர்கள் இவருக்கு ஆதரவு கொடுப்பதை நிறுத்தி இவர் சம்பந்தமாக பெரியோரிடம் முறையிட்டனர். இதனால் தான் புலி ஆதரவாளன் இல்லை என்று அனைவருக்குமே தெரிநதுவிடுமோ என்று பயந்த இந்த எட்டப்பன் உண்ணாவிரதம் என்ற ஆயுதத்தை கையிலெடுத்தார்.

அதாவது பக்கத்து மாநிலத்தில் சில இளைஞர்கள் நான்கம்சக் கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதம் தொடங்கி மூன்றாவது நாள் இந்தச் சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தவேண்டும் என்று எண்ணிய இந்தப் பச்சோந்தி இரு இளைஞர்களுடன் சேர்ந்து உண்ணாவிரத்தை ஆரம்பித்தது. இவருடைய உண்ணாவிரதத்தை நினைத்தால் எல்லோருக்குமே சிரிப்புத்தான் வருமாம். பக்கத்து மாநிலத்தில் இருந்துவந்த இளைஞர்கள் ஒரு சொட்டுத் தண்ணிகூட அருந்தாமல் உண்ணாவிரதம் இருந்தபோது இவர் தோடம்பழச்சாறும் பாலும் அருந்திக் கொண்டிருந்தாராம். அதைவிட இந்த உண்ணாவிரதம் தொடர்ச்சியாகச் சென்றால் தமிழருக்கு சார்பாக அரசாங்கம் திரும்பிவிடுமோ என்று அஞ்சிய இவர் பலதில்லுமுல்லுகள் செய்து தங்களுடைய உண்ணாவிரத்தைமட்டுமல்ல பக்கத்து மாநில இளைஞர்களின் உண்ணாவிரத்தையும் முடித்துவிட்டார்.

3 நாட்கள் இவர் இருந்த உண்ணாவிரத்தால் தான் தமிழீழ ஆதரவாளன்தான் என்று நிரூபிக்க முயன்று அதில் வெற்றியும் கண்டார்.அடுத்தது ஊடகம் இவர் இங்கே வந்திறங்கிய காலத்திலிருந்தே படிப்படியாக புதினம் நடத்துனரிடம் கதைத்து அவருக்கு சில செய்திகள் மற்றும் கட்டுரைகளைக்கொடுத்து தனது நட்பை வலுப்படுத்திக் கொண்டார். இன்றைய காலத்தை தங்களுக்கு சாதமாகப் பயன்படுத்ததிட்டமிட்ட தேசவிரோதிகள் இவரிடம் இப்படியான கட்டுரை ஒன்றை எழுதி வழுதி என்ற பெயரில் பிரசுரிக்கச் செய்ததாகவும் மற்றும் பல புலிகளின் பொறுப்பாளர்களின் பெயர்களில் அறிக்கைகளை வெளியிடச் செய்து மக்களைக் குழப்பும் வேலையிலும் இவர் இறங்கியுள்ளார. அண்மையில் தயாமோகனின் அறிக்கை என்று வேறோர் இதழில் வெளியான அறிக்கையும் செம்மலை என்ற பெயரில் வெளியிடப்பட்ட அறிக்கையும் இவரால் எழுதப்பட்டவை என்பதற்கு தகுந்த ஆதாரங்கள் உள்ளது.இதைவிட தனக்குத் தெரிந்த இளையோரிடம் தலைவர் மற்றும் விடுதலைப்புலிகள் சம்பந்தமாக தப்பான கதைகளைச் சொல்லிவருவதாகவும் அவர் கூறுவது உண்மையா என பல இளையோர் எம்மிடம் தொடர்புகொண்டு கேட்டனர். இப்பொழுது அந்தக் கட்டுரையில் உள்ளவிடயங்கள் சரிதான் என்று நிருபிக்க ஆதரவு தேடிக்கொண்டிருக்கிறார் தெய்வீகன்.

கட்டுரை எழுதிய வழுதியே (???) அமைதியாக இருக்கும்போது அந்தக்கட்டுரைக்கு ஆதரவு தேட முயல்வது ஏன் என்பது எல்லோருக்குமே தெளிவான உண்மை இந்தக் கட்டுரை மட்டுமல்ல விடுதலைப்புலி உறுப்பினர்களின் பெயரில் அறிக்கைகள்விட்டதும் விடப்போவதும் எமக்குள்ளேயே ஊடுருவி எம்மைக் குளப்ப முயல்பவர் கடந்த ஒருவருடமாக வேலையேதும் பார்க்காமல் ஈபிடிபியின் சம்பளம் பெற்றுக்கொண்டு அவர்களுக்கு நம்பிக்கையாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கும் தெய்வீகன்.மக்களே தலைவர் துரோகிகளைப்பற்றி கூறிய "எதிரிகளைவிட துரோகிகளே ஆபத்தானவர்கள்" என்ற சிந்தனையை நிலைநிறுத்தி துரோகிகளை ஒதுக்கி எமது இலட்சியத்தை நோக்கி முன்னகர்வோம்.


----------------------------------

பிரபாகரன் விரைவில் வீறுகொண்டு வெளிப்படுவார்: பழ.நெடுமாறன்

கர்நாடக தமிழர் பேரவையின் ஆண்டுவிழா ஊப்ளியில் நேற்று நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் வந்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா, இல்லையா? இருந்தால் எப்போது வெளியே வருவார்?

பிரபாகரன் நலமாக இருக்கிறார். உரிய நேரம் வரும்போது வெளியே வருவார். இதற்கு முன் பல தடவை பிரபாகரன் இறந்து விட்டதாக சிங்கள அரசு செய்திகளை பரப்பியது.

அந்த செய்திகள் எல்லாம் பொய்த்தன. அதேபோல இப்போது சிங்கள அரசு பரப்பும் செய்தியும் பொய்யான செய்தியாகும். தமிழீழ விடுதலை போராட்டத்தை முன்னிலும் வீறுகொண்டு நடத்த பிரபாகரன் விரைவில் வெளிப்படுவார்.

தமிழீழ இயக்கத்தில் உள்ள சிலரே பிரபாகரன் இறந்து விட்டதாக கூறுகிறார்களே. இதற்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

இயக்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட சிலர் இப்படி பொய்யான செய்திகளை பரப்புகிறார்கள். உதாரணமாக பத்மநாதன் என்பவர் ஆயுதம் வாங்கும் வேலையில் ஈடுபட்டு இருந்தார்.

அதில் அவர் சில தவறுகளை செய்ததால் அவரை அந்த பொறுப்பில் இருந்து பிரபாகரன் நீக்கி விட்டார். அதன்பிறகு அவர் சர்வதேச செயலகத்தில் ஒரு பொறுப்பாளராக மட்டுமே இருந்தார். இவருக்கு மேல் பல பொறுப்பாளர்கள் இருக்கிறார்கள். அறிக்கை விடுவதற்கு பத்மநாதனுக்கு எந்த அதிகாரமும் இல்லை.

பிரபாகரனுக்கு ஏதாவது நேர்ந்து இருந்தால் அதை அறிவிக்கும் அதிகாரம் அவருடன் களத்தில் நின்ற தளபதிகளுக்கு மட்டுமே உண்டு.

களத்தில் இல்லாமலும் சர்வதேச போலீசாரால் தேடப்பட்டு வருபவரும் எந்த கட்டத்திலும் தன்னை வெளிப்படுத்த முடியாமல் தலைமறைவாக இருப்பவருமான பத்மநாதனால், களத்தில் நடந்ததை எப்படி அறிந்து கொள்ள முடியும்?

இந்திய ``ரா'' உளவுத்துறை பிடியில் சிக்கி இத்தகைய அறிக்கைகளை அவர் வெளியிடுகிறார். உலக தமிழர்களின் மன உறுதியை குறைக்கவும், தமிழர்களை குழப்பவும் `ரா' உளவுத்துறை அவரை பயன்படுத்துகிறது.

Tuesday, June 16, 2009

வழுதி <---> புதினம் -மறுபக்கம்

உண்மையான பெயர்: பரந்தாமன்


தற்போதைய வசிப்பிடம்: அமெரிக்கா


எதிரிகள்: தலைவர் பிரபாகரன், தமிழ்செல்வன், அதியமான்


முழுநேரப்பணி: மேற்கண்டவர்களை தூற்றுவது


காரணம்: தனது காம இச்சைகைளையும், பணத் தில்லுமுல்லுகளையும்கண்டு பிடித்து விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து வெளியேற்றியமை.


புதினம் இணையத்தளத்தில் வழுதி என்பவர் 'முன்னாலே சென்றோரின்..." என்ற தலைப்பில் ஒரு கருத்தாய்வு கட்டுரை என்ற தலைப்பில் தலைவர் பிரபாகரன் அவர்களை கடுமையாக விமர்சித்து இருந்தார்.

பல ஆண்டு காலமாக தமிழீழ விடுதலைப் போராட்டதுக்கு ஆதரவு நிலை போல காட்டி வந்த புதினம் இணையத் தளத்தின் புலிச்சாயமும் இந்த கட்டுரையையுடன் வெளித்துப்போனது.


வழுதி என்பவர் யார்?

இவர் இவ்வாறான கட்டுரை எழுதவேண்டிய காரணம் என்ன?
என்ற கேள்விக்கு விடை காண்பதே இந்த கட்டுரை.

வழுதி என்ற புனைப்பெயரைக்கொண்ட பரந்தாமன் முன்னைய அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வநோடு அரசியல் துறையில் பணியாற்றியவர். இவர் பெண்களோடு தவறான நடத்தையில் ஈடுபட்டமை, நிதி விவகாரங்களில் பெரும் மேசடி செய்தமை போன்ற காரணங்களினால் தமிழ்ச்செல்வன் இவரை தன்னுடன் பணிக்கு வைத்திருக்க முடியாது என வி.பு தலைமைக்கு தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து தலைமைப்பீடம் புலனாய்வுத்துறையிடம் பரந்தாமன் (வழுதி) பற்றி விளக்கம் கேட்டது. பரந்தாமன் (வழுதி) பற்றி முழுமையான விசாரித்தும் பின்தொடரும் பணியிலும் இருந்தவர், புலனாய்வுத்துறை சார்ந்த அதியமான்.

இவர் தனது அறிக்கையில் தமிழ்ச்செல்வன் கூறியவையை உறுதிப்படுத்தியது மட்டுமல்லாது தமிழ்ச்செல்வன் குறிப்பிடாத பல செய்திகளையும் தலைமைக்கு தெரிவித்தார். அத்தோடு இவரை மேலும் இயக்கத்தில் அனுமதிக்க முடியாமைக்கு உரிய காரணங்களையும் குறிப்பிட்டார். இவருக்கான தண்டனை பற்றி தலைமைப்பீடம் யோசித்து வந்தபோது.

தலைவர் குறுக்கிட்டு இவர் நீண்ட காலம் பணியாற்றியமையை கருத்தில் கொண்டு குறைந்த தண்டனையுடன் இவரை இயக்கத்தில் இருந்து நீக்கி செலவுக்கு பணமும் கொடுத்து அனுப்பினார். ஆனால் சிறீலங்கா தவிர்ந்த ஏனைய நாட்டில்தாலன் பரந்தாமன் ஐந்து ஆண்டுகள் இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

வழுதியின் வேண்டுதலுக்கு இணங்க இவரை அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தார் தலைவர்.

நாட்டை விட்டுவெளியேறியதும் பரந்தாமன் என்ற வழுதி மேற்கண்டவர்கள் மேல் வக்கிரம் கொள்ள ஆரம்பித்தார்.

இவ்வளவு சம்பவங்களும்தான் வழுதி (பரந்தாமன்) புதினம் இணையத்தளத்தில் தலைவர் பிரபாகரன் அவர்களை விமர்சிக்க காரணமாக இருந்தது.

புதினம் இணையத்தளம் இக்கட்டுரையை ஏன் வெளியிட்டது....

புதினம் இணையத்தளம் அவுஸ்திரேலியாவில் இருந்து கரன் என்பவரினால் இயக்கப்பட்டுவருகின்றது. இவர் ஒரு விடுதலைப் புலி ஆதரவாளர் கிடையாது. இவர் சாந்திருக்கும் நபர்களில் பெரும்பாலனவர்கள்


புலி எதிர்ப்பாளர்கள். அவரின் முக்கிய நண்பவர்கள் சிலர் விவரம்:


ஜெப்றி உதுமான் லெப்பை
தென்புலோலியூர் கிருஸ்ணலிங்கம்
பரபரப்பு ரிசி


ஜெப்றி உதுமான் லெப்பை என்பவர் ஒரு கருணாவுடன் தொடர்புடைய கிழக்குமாகாண இஸ்லாமியத் தமிழர்.கொம்பியுற்றரர் பள்ளி வைத்திருக்கும் இவர் பரம புலிஎதிர்ப்பாளர். தென்புலோலியூர் கிருஸ்ணலிங்கம் என்பவர் கனடியத்தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் எனற வானொலியில் செய்தி படிக்கும் புலி எதிர்பாளர். இவர் இலங்கை போக்குவரத்து சபையில் இருந்தபோது மதுபோதையில் பெண்களுடன் தீய நடத்தையில் ஈடுபட்ட காரணத்தால் புலிகளால் தண்டிக்கப்பட்டவர். பரபரப்பு பத்திரிகை பதிப்பாளர் ரிசி இவர் கனடியத்தமிழ் ஒலிபரப்பு கூட்டுதாபனத்தில் பணியாற்றும்போது கரனுக்கு பழக்கம் ஏற்பட்டு இன்றுவரை தொடர்கிறது. இவர் புலி ஆதரவு போல் வேடம்போடும் புலி எதிர்பாளர். கனடியத் தமிழ் மக்களிடம் விசாரித்தால் இவர் பற்றி புரியும். எயார் கனடா நிறுவனம் மற்றும் வெளிநாட்டு உளவு அமைப்பு ஒன்றுடன் பணியாற்றிவருபவர்.

தன்னை புலிகள் வன்னிக்கு அழைத்தாகவும் தான் அங்கு சென்று அவர்களுக்கு புலனாய்வு குறித்து பாடம் எடுத்ததாகவும் கூறிவருகிறார்.

ஆனால் கனடாவில் இவருடைய பத்திரிகையில் வந்த புலி எதிர்ப்பு கட்டுரைகளால்.... பல கடைகளில் இப் பத்திரிகை தற்போது விற்பனையில் இல்லை என அறியமுடிகிறது.

கரன் நடத்திவரும் மற்றய இணையத்தளமான 'தமிழ்நாதம்" என்ற இணையத்தளத்தை பார்த்தால் புரியும் பரபரப்பு பத்திரிகை ரிசிக்கும் அவருக்கும் உள்ள தொடர்பு.

கரன் இந்தக் கட்டுரையை வெளியிடுவதற்கு முக்கிய காரணம் ஒன்றும் உண்டு.

கரன் ஆரம்பித்து நடத்தி வந்த புதினம் இணையத்தளம் விடுதலைப் புலிகளின் இணையத்தளம் போன்று மக்களுக்கு தோற்று வததால் அந்த இணையத்தளத்தை

தமக்கு தருமாறு விடுதலைப் புலிகள் கேட்டனர் ஆனால் கரன், இதுதான் தனது வாழ்வு ஆதராம் தான் பிழைப்பும் இல்லாமல் இதனை நம்பியே பிழைப்பு நடத்துவதாகவும் புலிகளுக்கு தெரிவித்து விட்டார்.

இந்தப் பிரச்சினையால் இவருக்கு செய்திகொடுப்பதை புலிகள் குறைத்துக் கொண்டு. ஜேர்மனியிலும் கனடாவிலும் இருந்து இயங்கும் இரு இணையத்தளங்களை அமைந்து திறம்பட தற்போதும் நடத்தி வருகின்றனர்.

இவைதான் முற்றிலும் வழுதிய தலைவர் பிரபாரகன் அவர்களை தூற்றியமைக்கும் புதினம் இணையத்தளம் அதனை வெளியிடுவதற்குமான காரணங்கள்.


ஆய்வு:
செல்வக்குமரன் சிற்றப்பலம் (கனடா)

புலம்பெயர் தமிழீழ மக்களுக்கான செய்தி


புலம்பெயர் தமிழீழ மக்களுக்கான செய்தி

சரணாகதியை முறியடித்தல்

புதிய காலகட்டத்தினுள் புகுமுன்பாக…

செம்மலை, வழுதி, தயாமோகன், பட்மனாதன் அண்ணார்…என இன்னும்சில பெயர்கள் ஈழ விடுதலை வட்டாரங்களில் சில நாட்களாக வெகு வேகமாக உச்சரிக்கப்படுகின்றன.

செம்மலை புலிகளின் அனைத்துலக தொடபகத்திலிருந்து அறிக்கை விடுகிறார்.
தயாமோகன் மட்டு – அம்பாறை அரசியற்பிரிவிலிருந்து அறிக்கை விடுகிறார்.
பன்னாட்டு பேச்சாளர் பத்மனாதன் ஒரு பொதுவான கொள்கைத்திட்டத்தை
உலகத்தமிழர்கள் உருவாக்க வேண்டுமென்கிறார். இவர்கள் யாவரும்
விடுதலைப்புலிகள் இயக்க முத்திரையை போல போலியாக உருவாக்கப்பட்ட ஒரு முத்திரையுடன் தமது அறிக்கைகளை முதன்மையாக தமிழ்வின், புதினம் ஆகிய இணையதளங்களில் வெளியிடுகின்றனர். இவை யாவும் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் வழமைக்கு மாறானது.

இவ்வாறு அறிக்கை வெளியிடுவோர் இயக்கத்தைசேர்ந்தவர்களாக இருந்தாலும் கூட அவர்களது அறிக்கைகளில் குறிப்பிடப்படும் ஒவ்வொருவரது பொறுப்புக்களிலிருந்து பார்க்க்டும்போது மூன்றாம் நிலை நான்காம் நிலை பொறுப்பாளர்களாகவே இருக்கவேண்டும் என்று தெரிகிறது.

இவர்களுக்கு அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடும் உரிமையை இயக்கம் ஒருபோதும்வழங்கியிருக்காது. இவர்களது அறிக்கைகள் வேக வேகமாக வெளியாகும் இக்காலக்கட்டத்தில் ‘புலிகளின் பன்னாட்டு வலைப்பின்னல் இன்னும் உறுதியாக இருக்கிறது’ என்று சிறீலங்காவின் வெளியுறவு அமைச்சர் ரோகித பொகல்லகாமா தெரிவித்திருப்பதை இணைத்துப்பார்த்தால் அந்த வலைப்பின்னலை நோக்கி அரசின் சதிவலை விரிவதையும் புலிகளின் முதல் நிலை, இரண்டாம் நிலை தலைமையை தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள முடியாமல் மூன்றாம் நிலை, நான்காம் நிலை தலைமையை சிறீலங்கா அரசு வலைவீசி வருகிறது என்ற ஐயப்பாடு எழுகிறது.

இந்த ஐயப்பாட்டிற்கு காரணமாக அமைவது மேற்சொன்ன அறிக்கைகளை தமிழ்வின், புதினம் ஆகிய இணையதளங்களில் வெளியிடுவோர் தமது அறிக்கைகளில் இரண்டு மூன்று விடையங்களை அழுத்தி சொல்வதுதான். முதலாவதாக தேசியத்தலைவர் இறந்து விட்டார் என்று அடித்துக்கூறுகின்றனர் இந்த அறிக்கையாளர்கள்.

கருணாநிதியே பிராபகரன் இறந்து விட்டார் என்ற செய்தி உறுதிபடுத்தப்படவில்லை என்று செய்தியாளர் கூட்டத்தில் கூறி விட்டார். அது தவிர இந்திய அரசின் பல்வேறு கண்டுபிடிப்பாளர்களும் உறுதியாக இது குறித்து எதனையும் கூறவில்லை.

தமிழகத்திலுள்ள ஈழ ஆதரவாளர்கள் இறப்புச்செய்தியை ஏற்றுக்கொள்ள வில்லை.இந்நிலையில் சிறீலங்கா அரசு தலைவர் இறப்பு பற்றிய தனது பொய்பரப்புரையைநிறுத்திவிட்டு விடுதலைப்புலிகளின் பெயரிலேயே அப் பொய்பரப்புரையை அவிழ்த்து விடும் என்று சாதாரண அறிவுபடைத்த எவரும் சிந்திக்கத்தக்கதே.

போருக்கு பல்லாயிரம்கோடி ரூபாய் செலவு செய்யும் சிறீலங்கா அரசு,
புலிப்பதாகையை உயர்த்திப்பிடிக்கும் ஒரு புறம்போக்குக்கூட்டத்தை உருவாக்க
சில நூறு கோடிகளை செலவு செய்யாதா என்ன?

பிராபகரன் இறப்பு விடையத்தில் அறிக்கையாளர்கள் புளுகுகின்றனர் என்பது ஒருகுறிப்பிட்ட செய்தியால் உறுதியாகிறது. ‘முன்னாலே போனவர்களின் பின்னாலேபோனவரின் வழியில்’ என்ற கட்டுரையை தமிழ்வின்னிலும், புதினத்திலும் வெளியிட்ட தி.வழுதி தலைவர் இறக்கும் போது சையனைட் குப்பியை அணிந்திருந்தார் என்று தெரிவித்திருக்கிறார். ஆனால் சிறீலங்கா அரசு
காட்டிய உடலில் சையனைட் குப்பி எதுவும் இருக்கவில்லை என்பது மட்டுமின்றி, ஜூன் 12, 2009 அன்று வெளியான ‘தினத்தந்தி’ செய்தித்தாளில் பிராபகரன் இறக்கையில் சையனைட் குப்பி அணிந்திருக்கவில்லை என்று ராணுவம் தெரிவித்த செய்தி வெளியாகியுள்ளது. இறப்புச்செய்தி உண்மையென்றே வைத்துக்கொண்டாலும் அரசின் கூற்றுக்கும் அறிக்கையாளர்களுக்கும் உள்ள முரண்பாடு தெரியவில்லையா? இந்த முரண்பாடே தலைவர் இறக்கவில்லை என்பதை உறுதிசெய்வது
விளங்கவில்லையா?

ஆகவே அறிக்கையாளர்களின் முதல்வேலை என்னவென்பது இங்கே
தெளிவாகிறது. அதாவது தலைவர் இறந்தது போல் ஒரு பிரமையை
உருவாக்கிடவேண்டுமென்பதே அது. ஏன் அத்தகைய பிரமையை உருவாக்க வேண்டும்? பிரபாகரன் இறந்ததாக நாம் நம்பினால்தானே இனி புலித்தலைமை என்பது இதுதான் என்று ஒரு புறம்போக்குத்தலைமை வெளிப்பட முடியும்! அதனால் தம் அறிக்கைகளில் இவர்கள் மிகக்கவனமாக பிரபாகரனின் புகழ்பாடி பாடியே அவரை புதைக்கும் வேலையை செய்து வருகின்றனர். தங்கள் அறிக்கைகள் தோறும் பிரபாகரனின் சாதனைகளை, ஈகையை, வீரத்தை அறிக்கையாளர்கள் மெச்சிப்புகழ்ந்தாலும் தமிழ்வின்னிலும், புதினத்திலும் தி.வழுதி எழுதியிருக்கும் கட்டுரையின் தலைப்பை பாருங்கள்:

“முன்னாலே போனவர்களின் பின்னாலே போனவரின் வழியில்”! என்ன ஒரு கேவலமான சொற்றொடர்! முன்னாலே போனவர்களின் பின்னாலே போனவராம் தலைவர். அவரது வீரத்தை புகழ்வது போல புகழ்பவர்கள் தங்களையறியாமல் அவர் கோழை என்று சொல்லவரும் தங்கள்
விருப்பத்தை தலைப்பிலேயே தெரிவித்து விடுகின்றனர்.

பிராபகரன் இறந்து விட்டதாக அறிக்கையாளர்கள் நிரூபிக்க முயலவில்லை. அவரோடு சேர்ந்து பொட்டு அம்மானும் பலியாகிவிட்டதாகவும், தலைவரின்
குடும்ப்பத்தினரும் களபலியாகிவிட்டதாகவும் கூறுகின்றனர். கோத்தபாய
ராஜபக்சேவைத்தவிர வேறெந்த சக்த்தியும் இவ்வாறு கூற வில்லை. இந்த
அறிக்கையாளர்களும் ஏன் அதுபோல கூறுகின்றனர்? அவர்களது ஆழ்மனவிருப்பம் அடுத்து வரும் அவர்களது வர்ணனையில் வெளிப்படுகிறது.

இதோ அறிக்கையாளர்களின் வர்ணனை:

விடுதலைப் போராட்டம் பெற்ற அரசியல் வெற்றிகளின் பெருமை பாலா அண்ணையைச்சாரும்.

விடுதலைப் போராட்டம் பெற்ற இராணுவ வெற்றிகளின் பெருமை தீபன், பால்ராஜ்,சூசை, பொட்டு, கே.பி.... என இன்னும் சிலரைச் சாரும்.

விடுதலைப் போராட்டத்திற்கு இயங்கு சக்தியைக் கொடுத்த பெருமை தமிழ்த்
சாரும்.

ஆனால் - சதிகளும், தோல்விகளும், துரோகங்களும், விலை போதல்களும்,
நெருக்கடிகளும் நிறைந்து கிடந்த மிகக் கரடு முரடான பாதை வழியாக - மனம்
தளராமல் - விடுதலைப் போராட்டத் தேரை முன்னோக்கி ஓட்டிச் சென்ற பெருமைபிரபாகரனையே சாரும்.

மேற்கண்ட வர்ணனையில் கே.பி என்றழைக்கப்படுபவரைத் தவிர மற்ற அனைவரும் இறந்து விட்டார்கள், அல்லது இறந்து விட்டதாக அறிக்கையாளர்களால் சொல்லப்படுகிறது. ஆக அந்த கே.பி.தானே தேருக்கு இப்போது சொந்தக்காரர்!

தலைவரின் சாவுச்செய்தி உலகிற்கே புதிராக இருக்கிறது. ஆனால் இயக்கத்தை
கைப்பற்றுவதற்காக தலைவரையும் அவரது குடும்பத்தினரையும் குழிதோண்டி
புதைத்து விட்டு, வாரிசுரிமைப்பட்டா வேண்டுன்கின்றனர் அறிக்கையாளர்கள்.
தங்களுடைய வாரிசுரிமைக்கு விடுதலைப்புலிகள் சின்னத்தை பயன்படுத்திக்கொள்ள முடியுமா என்று சிந்தித்தவர்கள் உண்மையான புலிச்சின்னத்தை பயன்படுத்தினால் பின்னாளில் சிக்கல் வரலாம் என்று யூகித்து இரண்டு வித போலியான சின்னங்களை தயாரித்து பயன்படுத்தியுள்ளனர். ஜூன் 9-ம் தேதி பொ.செம்மலை என்பவர் வெளியிட்ட அறிக்கையில் இடம்பெற்ற சின்னத்தில்புலிமுகம் இடப்பக்கம் நோக்கியுள்ளது. புலித்தலையை சுற்றிலும் தோட்டக்கள் ஏதுமில்லை. சின்னத்தின் கீழ் ஏதோ மொழியில் சில சொற்கள் தெளிவின்றி இடம்பெற்றுள்ளன.

ஜூன் 110ம் தேதி தயா மோகன் என்பவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இடம்பெற்றுள்ள சின்னத்தில் புலிமுகம் வலப்பக்கம் நோக்கியுள்ளது. புலித்தலையை சுற்றிலும் தோட்டாக்கள் இடம்பெற்றுள்ளன.
சின்னத்தின் கீழ் ‘தமிழ் ஈழம்; என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது.
மேலும் ஏதோ சில சொற்கள் தெரிகின்றன. வாசுரிமை கோருபவர்கள் சின்னத்தில் மாறாட்டம் செய்வதன் நோக்கம் எதிர்காலத்தில் உண்மையான தலைமை வெளிப்பட்டாலும் தாங்கள் ‘தமிழீழ விடுதலைப்புலிகள்’என்ற ஓர் அமைப்பிற்கு தலைமை தாங்குவதாக காட்டிகொள்வதற்காகவே.
விடுதலைப் புலிகள் இயக்கத்தலைமைக்கு வாரிசுரிமை கோரும் அறிக்கையாளர்கள் அழுத்திச்சொல்லவரும் இரண்டாவது விடையும் காயம்பட்டுள்ள கணக்கற்ற பேரையும் வதைமுகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள லட்ச்சக்கணக்கான மக்களையும் விடுவித்திட பன்னாட்டரங்கு மூலம் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்பதே.சரியான கோரிக்கை.

‘போரை நிறுத்து; புலிகளை அங்கீகரி; ஈழத்தை ஏற்படுத்து"
என்று முழங்கி களம் கண்ட புலம்பெயர் உறவுகள், இனி “போரில்
சிக்குண்டவர்களை விடுவி; ஈழத்தை விடுவி” என முழங்கி களம் காண வேண்டும்.இடையில் ஓர் வெற்றிடம் உள்ளது. “விடுதலைப்புலிகளை அங்கீகரி” என்ற இடம்வெற்றிடமாக உள்ளது. அந்த வெற்றிடத்தில் தங்களை இருத்திக்கொள்ள முயலும் வாரிசுரிமை கோரும் அறிக்கையாளர்கள் புலம்பெயர் தமிழர்களின் அமைதிவழிப்போராட்டம் என்பது இனி ஈழத்திலும் தொடர வேண்டும் என்றும் தொடக்க முதலே உரைத்து வருகின்றனர்.

அமைதி வழி என்பது தந்தை செல்வா காலத்தில் பரீட்ச்சித்துப் பார்க்கப்பட்டது. ஆயுத வழி தலைவர் பிராபகரனால் 37 ஆண்டுகளாக பரீட்ச்சித்துப் பார்க்கப்பட்டது. இரண்டுமே தோல்வியடைந்தது என்று எடுத்துக்கொண்டாலும் கூட ஒன்றிலிருந்து புதிய ஒன்று விளையுமே தவிர பழைய ஒன்றிற்கு எதுவும் திரும்பி போவதில்லை. வரலாறு திரும்புவதில்லை.

தமிழ்நாட்டின் அரசியல் வாதிகளைப்போல ஈழத்திலும் தாங்கள் தலையெடுக்கலாம் என்ற நப்பாசை உடையோர் வரலாறு திரும்பும் எனக்கூறலாம். ஆனால் வரலாற்றிலிருந்து பாடம் பெற முயல்பவர்கள் – எதிரியின் வலையில் வீழ்ந்து விலைபோகாதிருக்க விரும்புபவர்கள் புதிய வழிமுறைகளைத்தான் நாடுவார்கள். புலித்தலைமை தங்கள் துப்பாக்கிகளை மௌனித்து வைக்கப்போவதாக அறிவித்தபின் வேறெந்த முடிவுகளையும் எடுக்க வில்லை என்பதை இங்கு குறிப்பிடவேண்டும்.

பன்னாட்டு போக்கிற்கேற்ப பரீட்ச்சித்துப்பார்க்க வேண்டிய புதிய வழிமுறைகளை அவர்கள் இப்போது பரிசீலித்துக்கொண்டிருப்பார்கள்

இதனையடியாகக்கொண்டு தமிழ்நெட் இணையதளத்தில் வெளியான
ஆலோசனைத்திட்டத்தினைக் கூறலாம். புலம்பெயர் ஈழ அரசு ஒன்றை ஏற்படுத்தவேண்டுமென்கிறது அவ்வாலோசனைத்திட்டம். இன்று திபேத்தியர்களுக்காக தலாய்லாமா தலைமையில் புலம்பெயர் அரசு ஒன்று உள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னாளில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில் புலம்பெயர் இந்திய அரசு ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அதுபோல் புலம்பெயர் ஈழ அரசு ஒன்று
அமைக்கப்பட்டால் அது பொம்மை அரசாக இருக்காமல் தற்போது ஒரு திருப்புமுனையை அடைந்திருக்கும் ஈழப்போரின் வடிவங்களையும், போக்குகளையும் அது தீர்மானிக்க வேண்டும். அவ்வாறு தீர்மானிப்பதன் மூலம் விடுதலைப்புலிகளின் தலைமைப்பாத்திரத்தையும், ஈழத்தை எதார்த்தத்தில் அடைவதற்கான சாத்தியக்கூறுகளையும் உருவக்க வேண்டும்.

அந்நிலையில் போராட்ட வழி என்பது பழையன கழிதல், புதியன புகுதல் என்பதாக இருக்க வேண்டுமேயன்றி பழையன புகுதலாக இருக்கக்கூடாது. அமைதி வழியா ஆயுதப்போராட்ட வழியா என்பதை தீர்மானிக்கப்போவது ஏற்கனவே வழிநடத்திய தலைமையின் கீழ் புறப்படப்போகும் புதிய தலைமுறைதான். தலைமையை பிளக்க முயலும் எதிரிகளின் ஊதுகுழல்கள் அல்ல.

விடுதலைப்புலிகளின் தலைமையின் கீழ் நான்காவது ஈழப்போர் ஏற்படுத்திய
திருப்புமுனையாக புறப்பட்டிருக்கும் புதிய புலம்பெயர் தலைமுறை ஈழக் காடுகளிலும் மேடுகளிலும் மக்கள் முன்னெடுக்கப்போகும் புதிய போராட்டங்களை உள்வாங்கிக்கொண்டு, ஊமையாகக் கிடக்கும் தமிழகத்தின் போராட்ட சக்திகளுக்கு புதுவடிவம் கொடுத்து, உலகமய போக்கினுக்கு ஏற்றபடி அல்லாமல் அதற்கு எதிர்முகமாக, ஏகாதிபத்திய எதிரி முகாமாக போராட்டத்தைக்
கட்டியமைக்க வேண்டும்.

இந்த போராட்டத்தில் அமைதி வழியும் சேரும், எதிரி முகாம்களின் மீது தாக்குதல் தொடுக்கும் வழியும் சேரும். இரண்டில் ஒன்றை மட்டுமே தேர்ந்தெடுப்பது வரலாறு திரும்பும் என்ற திரிபு வாதத்தையேமுன்னிறுத்தும். புதினம், தமிழ்வின் அறிக்கையாளர்கள் அமைதிவழி ஒன்றுதான்இலக்கை அடைய இனி ஒரே வழி என்பது அவர்கள் கருணாவின் வழியை, கருணாநிதியின்
வழியை, டக்ளஸ் தேவானந்தாவின் வழியை, சித்தார்த்தன், ஆனந்த சங்கரியின்
வழியை தேர்ந்தெடுப்பதையே காட்டுகிறது.

இங்கு சொல்ல வேண்டிய இன்னொரு விடயம் புதினம், தமிழ்வின் அறிக்கையாளர் குழுவினர் அடுத்து வரும் காலக்கட்டத்தினை 3-வது ஈழப்போர் என வர்ணிப்பது பற்றியது. போர் என்பது சிங்கள இனவாதிகள், மற்றும் தமிழ் இன விடுதலைப்பாதையாளர்கள் ஆகியோர் இடையே நடந்த ஆயுதப் போரைக் குறிக்கும். அரசியல் போராட்ட இயக்கம் என்பது தந்தை செல்வா காலம் தொடங்கி இன்று வரை முடிந்து இனியும் வரப்போகும் காலத்தை உள்ளடக்கியது.

அவ்வகையில் தந்தை செல்வாவின் காலம் தமிழர் உரிமை விடுதலை போராட்டத்தின் முதற்பகுதி எனலாம். அந்த முதற்பகுதி வட்டுக்கோட்டை தீர்மானத்தோடு நிறைவு பெறுகிறது. வட்டுக்கோட்டை தீர்மானம்
தனி ஈழ நாட்டை உலகிற்கு அறிவித்தது. அதனைத் தொடர்ந்து வந்த காலம்
ஆயுதப்போரின் காலம். அது நான்கு கட்டங்களாக நடந்து இன்று ஒரு
திருப்புமுனையைத் தொட்டுக் கொண்டு நிற்கிறது. தமிழர் உரிமை விடுதலைக்கான இந்த இரண்டாவது போராட்டக்காலம் விடுதலைப்புலிகளின் கை மேலோங்கியிருந்த காலம். இக்காலத்தில்தான் நான்கு ஈழப்போர்கள் நடந்து முடிந்திருக்கின்றன.

தமிழர் உரிமையை மீட்பதற்கான எதிர்வரும் மூன்றாவது விடுதலைப் போராட்டக்காலத்தில் ஆயுதபோர் இடம்பெற்றால் அது ஐந்தாவது ஈழபோராக அமையும்.

தந்தை செல்வா காலம் தொடங்கி எதிர்வரும் காலக்கட்டம் வரை அமைதி வழி
அரசியலும், ஆயுதபோராட்டமும் மாறி மாறி வந்துள்ளதைக் காண்கிறோம். ‘அரசும் புரட்சியும்’ நூலில் அரசியல் மேதை லெனின் கூறுகிறார்: “அரசியல் என்பது ஆயுதங்களின் உதவியின்றி அமைதி வழியில் நடைபெறும் போர். போர் என்வது ஆயுதங்களின் உதவியுடன் நடைபெறும் அரசியல்”. முதலில் அமைதி வழியில் அரசியில் நடத்தும் இரு தரப்பாரும் ஒரு புள்ளியை நெருங்குகையில் இனி மேற்கொண்டும் அமைதி வழியில் தங்கள் அரசியலை தொடர முடியாது என்ற நெருக்கடியை உணரும்போது ஆயுதங்களின் உதவியோடு தங்கள் அரசியலைதொடருகின்றனர். போர் நடத்த முற்படுகின்றனர். அதுதான் ஈழ
விடுதலைப்போராட்டத்தில் நடைபெற்றது.

வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு பின்பு சிறீலங்கா இனவாதிகளும் சரி தமிழர் விடுதலைப் போராட்டக்காரர்களும் சரி இனிமேற்கொண்டும் தங்கள் அரசியலை அமைதி வழியில் தொடர முடியாது என்பதை உணர்ந்தனர். ஆயுதந்தரித்தனர். இன்றைய நிலைமையில் சிங்கள இனவாதிகளுக்கும் தமிழர் விடுதலைப் போராட்டக்காரர்களுக்கும் இடையேயான புரிந்துணர்வு யாது?

இந்தக் கேள்விக்கு இரு தரப்பினரும் தங்கள் செயல்பாடுகள் மூலம் அண்மை
எதிர்காலத்தில் பதிலளிப்பார்கள். தி.வழுதியோ, பத்மனாதன் அண்ணாரோ,
செம்மலையோ, தயா மோகனோ அல்லது இந்த பெயர்களுக்கு பின்னால் ஒளிந்து
கொண்டிருக்கும் இந்திய அரசோ பதிலளிக்க முடியாது. அமைதி வழி என்பது ஒரு
தரப்புக்கு எடுத்துச் சொல்வது மட்டுமல்ல. இரு தரப்பும் ஏற்றுக்கொள்ள
வேண்டிய ஒன்று.

சிங்கள இனவாதத் தரப்பு வன்முறையைக் கடைப்பிடிக்கவும், ஈழத்தமிழர்கள் அமைதிவழியில்தான் அரசியல் நடத்த வேண்டும் என்ற தந்தை செல்வா, அமிர்தலிங்கம் போன்றோரின் குரல் கிணற்றுக்குள்ளிருந்து ஒலிக்கும்
குரலாக வரளாற்றில் மாறிவிட்டது. ஒரு வழி மட்டுமே சரியானது என்று கூற
தயாமோகனும், பத்மனாதனும் அவர்களுக்கு பின்னலிருப்போரும் யார்? எதிரி
ஆயுதங்களோடு நிற்கவும், அமைதி வழியில் உங்கள் போராட்டத்தை தொடருங்கள் என்று கூறுவது எதிரியிடம் சரணடையுங்கள் என்று கூறுவதன்றி வேறென்ன?

ஆகவே, தமிழ்வின், புதினம் குழுவினர் விடுதலைப்புலிகளின் தலைமையைக்
கைப்பற்றும் நோக்குடனும், சரணாகதி மூலம் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளைப்
போன்றதொரு வகையாக மாறமுடியும் என்ற தங்கள் விருப்பத்தை
நிறைவேற்றிகொள்ளவும் முதலாவதாக தேசியத்தலைவரின் ஆளுமையிலிருந்து தமிழர்களை அந்நியப்படுத்த முயல்கின்றனர். இதற்காக தேசியத்தலைவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இறுதி வணக்கம் செலுத்தத் தூண்டுகின்றனர்.

இரண்டாவதாக இனிவரும் காலம் ஈழப்போரின் 3-ம் காலம் என்று கூறுவதன் மூலம் தந்தை செல்வா காலத்திற்கும் விடுதலைப்புலிகளின் காலத்திற்கும் இடையேயான அரசியல் தேவைகளின் வேறுபாட்டை மறைத்து வரலாற்று திரிபுவாதத்தில் ஈடுபடுகின்றனர். இதன் மூலம் ஈழப்போர் என்று வகைப்படுத்தப் படுவதும் தந்தை செல்வாவின் கால நிகழ்வுகளும் ஒன்றுதான் என்று நிறுவி வரலாறு திரும்பும் என நம்பச்செய்து பழைய அமைதிவழிப்பாதைதான் இனி ஒற்றை வழிப்பாதை எனக்காட்டுகின்றனர்.

அமைதி வழி அரசியலையும், ஆயுதப்போரையும் தீர்மானிக்கப்போவது புதிய தலைமுறையும், களமாடும் புலிகளும் அவர்களுக்கு எதிரான சிங்கள இனவாதிகளும்தான் என்பதை மறைக்கின்றனர். மூன்றாவதாக ஆயுதங்களுடன் நிற்கும் எதிரியிடம் அமைதிவழியில் சரணடையச்சொல்வதன் மூலம் எதிர்வரும் காலக்கட்டத்தில் போராட்டத்தைத் தொடர்வதற்கான புதிய வாய்ப்புக்களை மறுதலிக்கின்றனர். சரணாகதி வழியில் போன டக்ளஸ் தேவானந்தாவும், கருணாவும், ஆனந்த சங்கரியும் எந்த போராட்டத்தை தொடர்ந்தனர் என்று சிந்தித்துப்பார்க்க வேண்டும்.

இந்த புதினம், தமிழ்வின் குழுவினருக்கு உடைந்து நொறுங்கி ஈழத்தமிழர்களும், ஊமைகளாக கிடக்கும் தமிழ்நாட்டின் போராட்ட சக்த்திகளும் சேர்ந்து கடந்த 37 ஆண்டுகளாக சளைக்காமல் போராடிய மாவீரன் பிரபாகரனின் வழியில் சொல்ல வேண்டிய பதில் இதுதான்:

“வரலாறு திரும்புவதில்லை; நாம் ஆயுதம் ஏந்த வேண்டுமா வேண்டாமா என்பதை தீர்மானிக்கபோவது எதிரிதான்!”.

அது வரையிலும் செங்கொடிக்கு எதிரானவர்கள் செங்கொடியையே தூக்கிகொண்டு வருவது போல புலிக்கொடிக்கு எதிரானவர்கள் புலிக் கொடியையே தூக்கிகொண்டு வருவார்கள் என்பதை தமிழர்கள் மறக்காமல் தங்கள் முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும்.

நிலவரசு கண்ணன்
வீரத்தமிழன் முத்துக்குமார் பேரவை
தமிழகம்

உலகத் தமிழ் ஊடக வலையமைப்பில் றோ ஊடுருவல்! திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்

உலகத் தமிழர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் நாசகார சதி நோக்கத்துடன், ஆங்கில - தமிழ் ஊடக வலையமைப்பு ஒன்றை நிறுவுவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளில் இந்தியாவின் வெளியக உளவு அமைப்பான றோ நிறுவனம் இறங்கியிருப்பதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கென்று புதுடில்லியை சேர்ந்த இராமச்சந்திரன் என்ற தென்னிந்திய ஆங்கில பத்தியெழுத்தாளர் ஒருவரை தென்கிழக்காசிய நாடொன்றுக்கு றோ நிறுவனம் அனுப்பி வைத்திருப்பதோடு, அவர் ஊடாக கனடா, அவுஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் இயங்கி வரும் தமிழ் - ஆங்கில பத்தி எழுத்தாளர்கள் அணுகப்பட்டு, தமிழீழம் என்பது வெறும் பகற்கனவு என்ற கருத்தியலை விதைக்கும் நகர்வுகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது.

இதேபோன்று, கடந்த காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையில் முரண்பாடுகள் நிலவியமை போன்ற கருத்துக்களையும், தற்பொழுது தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு கட்டமைப்புக்களில் உடைவுகள் ஏற்பட்டிருப்பது போன்ற செய்திகளையும் வெளியிடும் நிகழ்ச்சித் திட்டம் ஒன்றை, த நேசன், த சண்டே லீடர், த ஹிந்து, புறொன்ட் லைன் போன்ற ஆங்கில ஊடகங்களில் ஆய்வுப் பத்திகளை எழுதி வந்த கனடிய தமிழ் ஊடகவியலாளரின் உதவியுடன், றோ நிறுவனம் அமுல்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் வெளிப்பாடாகவே, இதுவரை காலமும் புலிச் சாயத்துடன் இயங்கி வந்த சில தமிழ் இணைய ஊடகங்கள், தமது முன்னைய தமிழ் தேசிய நிலைப்பாட்டில் இருந்து அந்தர் பல்டி அடித்து, மாற்று அரசியல் தீர்வுகள், இராசதந்திர உறவாடல்கள் போன்ற குழப்பகரமான செய்திகளையும், கட்டுரைகளையும் வெளியிடுவதாக விமர்சகர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

இதனிடையே, தென்தமிழீழ மாவட்டங்களில் தலைமறைவாக செயற்படும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் போராளிகளின் பெயரைப் பயன்படுத்தி, அவர்களின் ஒப்புதலும் அங்கீகாரமும் இன்றி போலியான அறிக்கைகள் சிலவற்றை சுவிற்சர்லாந்தில் இருந்து இயங்கி வரும் தமிழ் ஊடகவியலாளர் ஒருவர் வெளியிடுவதாக தகவல்கள் கசியத் தொடங்கியுள்ளன.
இது தொடர்பாக தென்தமிழீழத்தில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் வட்டாரங்களுடன் எமது செய்தியாளர் தொடர்பு கொண்ட பொழுது, கடந்த ஒரு வார காலப்பகுதிக்குள் தமது அரசியல்துறைப் போராளிகள் எவரும் எவ்விதமான அறிக்கைகளையும் வெளியிடவில்லை என்று, தமிழீழ விடுதலைப் புலிகளின் வட்டாரங்கள் எம்மிடம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளன.

-இராவணன் தேசம்

'கதிரைக் கனவுகளால் எங்களைச் சாகடிக்காதீர்கள்'

தமிழீழக் கனவோடு வாழ்ந்த பல்லாயிரக் கணக்கான மக்கள் பலி கொள்ளப்பட்டுவிட்டார்கள். அந்த இலட்சியத் திற்காகப் போராடிய போராளிகளும், தளபதிகளும் சுட் டெரிக்கப்பட்டு விட்டார்கள். உயிருக்குப் போராடிய காயமடைந்த மக்களையும் போராளிகளையும் காப்பாற்றவென்ற வேட்கையுடன் மானத்தோடு மாவீரராகும் தத்துவத்தையும் கைவிட்டு, சரணடைய முற்பட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் நடேசனும், சமாதானச் செயலகப் பணிப்பாளர் புலித்தேவனும் கூட வெள்ளைக் கொடியுடன் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டார்கள்.

எல்லாமே சுடுகாடாக்கப்பட்டு சாம்பல் மேடாகக் காட்சி தருவதை ஐ.நா.வின் பொதுச் செயலர் பான் கி மூனும் வானிலிருந்து பார்வையிட்டுச் சென்றுவிட்டார்.

வன்னியில் தப்பிப் பிழைத்தவர்கள் முட்கம்பி வேலிச் சிறைக்குள் அடிமைச் சின்னமாக, அடுத்த வேளை உண வுக்கு எதிரியின் கையைப் பார்க்கும் இழி நிலைக்கு உட் படுத்தப்பட்டு உள்ளார்கள். அங்கும் இளம் வயதினர் வடி கட்டப்பட்டு, வதை முகாம்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றனர். சரணடைந்த போராளிகளின் நாட்கள் எண்ணப்படுகின்றன.

ஆனாலும், சர்வதேசங்கள் இன்றுவரை ஆக்கபூர்வமாக எதையும் செய்யவில்லை. தமிழீழ விடுதலைப் போராட் டத்தை பயங்கரவாதமாகச் சித்தரித்து சிங்கள சிறிலங்கா நடாத்திய பரப்புரைகளை ஏற்று, விடுதலைப் புலிகளைத் தமது நாடுகளில் தடை செய்ததன் மூலம் இந்த இனப் படுகொலையில் பங்கு வகித்த உலக நாடுகள் தமிழினத்தின் அத்தனை அழிவு களுக்குப் பின்னரும் தமிழர்களுக்கான நீதியை வழங்க முன்வரவில்லை.

வீதியிலிறங்கிப் போராடுகின்றோம்... உண்ணாவிரதங்கள் இருக்கின்றோம்... கண்ணீர் விட்டுக் கதறுகின்றோம்... 'எஞ்சியுள்ள எமது மக்களையாவது சிங்கள இனவாத அரசின் இன அழிப்பிலிருந்து காப்பாற்றுங்கள்...' என்று. உவ்வொரு மணித் துளிகளாக... நாட்களாக... வாரங்க ளாக... காலம் கடந்து செல்கின்றதே தவிர வேறேதும் நடப்பதாகத் தெரியவில்லை.

'தமிழர்கள் தோற்கடிக்கப்பட்டார்கள்' என்று சிங்களம் மீண்டும் ஒரு கொண்டாட்டத்திற்கு நாள் குறித்துள்ளது. பாதுகாப்பை இழந்த தமிழர்கள் மீது சிங்களனின் காறித் துப்பல்கள்... குனிந்த தலையுடன் அதைத் துடைத்துவிட்டு நகரத்தான் அவர்களால் முடிகின்றது. தமிழ்ப் பெண்கள் நடு ரோட்டில் பாலியல் துன்புறுத்தல்களுக்குள்ளாகிறார்
கள்... ஆனாலும் விதியை எண்ணி அழுது கொண்டே வீட்டிற்குச் சென்று தலை முழுக மட்டும்தான் அவர்களால் முடிகின்றது.

இப்போது டக்ளஸ் தேவானந்தா, கருணா, ஆனந்த சங்கரிகள் முகங்கள் மட்டும் பயம் நீங்கிப் பிரகாசிக்கின்றன. பாவம், தமிழர்கள் தங்கள் பலத்தை இழந்து கூனிக் குறுகி முடங்கிக் கிடக்கிறார்கள். அவர்களைக் காப்பாற்ற யாருமே கிடையாது. ஆனால், சிங்கள தேசத்தின் விருப்பங்களை ஏற்று 'பாலூற்றிக் கடமை செய்ய' புலம் பெயர் தேசங்களிலும் சிலர் ஆலாய்ப் பறக்கின்றனர்.

விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாக நொருக்கப்பட்டிருக்கலாம்... போராளிகள் பலர் அந்த நெருப்பு வேள்விக்குப் பலியாகிப் போயிருக்கலாம்... தளபதிகள் நயவஞ்சகமாகக் கொல்லப்பட்டிருக்கலாம்... ஆனாலும் நாங்கள் நம்ப மாட்டோம் 'எங்கள் சூரிய தேவனை இந்தச் சிறு பொறிகள் சுட்டெரித் திருக்கும் என்று...'

எம்முள் நிறைந்து... எப்போதும் உடன் இருந்து... எம்மை வழிநடத்தும் எம் தலைவன் மரணம் என்ற எல்லைக்கு அப்பாற்பட்டவன். 'மனிதன்தான் மரணம் அடைவான். மாவீரனுக்கு ஏதடா மரணம்?' என்ற இயக்குனர் சீமானின் வார்த்தைகள் எம் நெஞ்சத்தை மீண்டும் உறுதி கொள்ள வைக்கிறது. சத்திரியன் சாவதில்லை. அவன் சரித்திரம் ஆகின்றான்.

'நாம் வீழமாட்டோம்! நாம் வீழமாட்டோம்!!' என்ற நம்பிக்கைத் துடிப்பு மட்டுமே தமிழர்களை வாழ வைத்துக் கொண்டிருக்கின்றது. கரிகாலன் மீண்டும் வருவான்... என்ற நம்பிக்கை மட்டுமே அவர்களை மீண்டும் நிமிர வைக்கின்றது. அது அவர்களின் ஆத்மார்த்த உணர்வு. அந்த நம்பிக்கை அவர்கள் சாவு வரை நீடிக்கும். அதைக் கலைக்கும் உரிமை யாருக்கும் கிடையாது.

'கதிரைக் கனவுகளால் எங்களைச் சாகடிக்காதீர்கள்'

Thursday, June 11, 2009

புலம்பெயர் தமிழர்களைக் குழப்பும் சில பச்சோந்திகள்

இங்கு தலைவர் உயிரோடு இருக்கின்றாரா இல்லையா என்பது எனது ஆய்வல்ல

ஆனாலும் தலைவரின் இறந்த உடலைப் பார்த்ததாக சொல்லப்பட்ட இரு தமிழர்கள் ஒருவர் துரோகி கருணா , துரோகியாகக்கப்பட்ட தயா மாஸ்ரர் இவர்கள் மூலம் எப்படியான உண்மைகள் வரும் என்று சொல்லித் தெரியவேண்டியதில்லை

ஆகவே இது பற்றி ஆய்வு செய்வது வெறும் ஊகங்களே

உண்மைகள் வெளிவரும் வரை பொறுத்திருப்போம் தேசியத் தலைவர் எமக்கு விட்டுச் சென்றிருக்கின்ற பணியை த் தொடருவொம்

ஆகவே நாம் எதற்காக போராடுகின்றோம் அதற்கான செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுப்பதுவே சாலச்சிறந்தது

ஆனாலும் கனடாவில் நம்மவர்கள் சிலரின் மனவோட்டத்தைப் பார்த்த பின்னர்
ஒரு சில ஆதங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது

கனடாவில் நம்மவர்கள்

1. இனி எல்லாம் முடிந்து விட்டது இனி இவர் இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன ?

2. இவர் கடைசி வரைக்கும் சிங்கள சனத்தை அழிக்கவில்லையாம் -இவரிடம் இருந்து பறித்து வேறு ஒருவரிடம் தலைமையை கொடுத்திருக்க வேண்டும்

3.தலை முடிந்து விட்டது இனி ஒன்றும் இல்லை என்று முடங்கி கிடப்பவர்கள்

4. கனடாவில் தமிழர்களது எழுச்சி நிகழ்வுகளில் மது போதையில் சிலர் மேளதாளத்துடன் கழியாட்டம் போடுவது

5.கனடாவில் தமிழ்கொடி பிடிப்பது மட்டுமே எழுச்சி என்று சொல்லிக் கொண்டு எழுச்சி நிகழ்வுகளில் குழப்பத்தை உண்டு பண்ணும் சில கூட்டம் [ ஒரு சில மணிகளுக்கு தாழ்த்துவதில் நாம் ஒன்றும் வீழப்போவதில்லை ]

6.ஒட்டுக்குழுவின் ஊடகங்களில் வரும் செய்திகளை பார்த்து விட்டு மற்றவர்களையும் குழப்பும் கூட்டம்

7. தலைவர் பிரபாகரன் உயிரோடு இருந்து மீண்டும் அடித்து பிடிக்க வேண்டும் என்று சொல்லும் கூட்டம்-
- மீண்டும் பிரபாகரனும் அவர்களது படையணிகளும் சண்டை போட இவர்கள் புலத்தில் தமது குடும்பத்துடன் கிரிக்கெட் மச் பார்ப்பது போல் வீரவசனம் பேசிக் கொண்டிருப்பதற்கு

8. பச்சோந்தி தமிழர்களுக்காக தனது வாழ் நாளையே அர்பணித்த தலைவனும் போராளிகளும் உயிரோடிக்க வேண்டும் அவர்களுக்காக வாழ்வதற்கு

இதையே நான் புலிகளே தமிழர்களுக்காக பட்டது போதும் இனி உங்களுக்காக வாழுங்கள்

புலிகளின் தலைமையை போராளிகளை அவர்கள் உயிரோடு அல்லது பலமாக இருந்த போது புகழ் பாடியவர்கள் அவர்கள் சதியால் அழிக்கப்பட்ட பின்னர் வசை பாடுவது எதிராக விமர்சிப்பது அநாகரிகம் , பச்சோந்தித் தனம் என்பதை விமர்சிக்காமல் இருக்க முடியுமா ???

பயங்கரவாதிகள் என்று சொல்லப்பட்டவர்கள் கடைசி வரை மனித நேயம் மிக்கவர்களாக மகான்களாகவே மடிந்திருக்கின்றார்கள்

ஆனால் காந்தியம் , புத்த தர்மம் என்றெல்லாம் சொல்லப்பட்டவர்கள் ஆரம்பம் முதல் கடைசி வரை பயங்கரவாதிகளாகவே இருக்கின்றார்கள்

ஆனால் சிலரின் பச்சோந்தி தனங்கள் வெளிப்பட்டிருக்கின்றன அவர்களை தமிழர்கள் சுயவிமர்சனம் வேண்டி இக்கட்டுரை

புலிகள் இல்லாக் காட்டில் நரிகளுக்கு கொண்டாட்டம் என்பார்கள்

அது போல் சில ஆய்வாளர்களும் அவர்களின் பச்சோந்தித் தனங்களும்

முன்னாள் புலி என தன்னை சொல்லிக்கொள்ளும் சாத்திரி முதல்
யெகத் கஸ்பார் ,
அனிதாப் பிரதாப் ,
சுவிஸ் அம்பலவாணர்
தமிழர்களுக்கு கடிதம் கடிதங்களாக எழுதிய வழுதி வரை

1.முன்னாள் புலி என தன்னை சொல்லிக்கொள்ளும் சாத்திரி

முன்னாள் போராளி சாத்திரியுடன் ஒரு பேட்டி

விடுதலைப் புலிகளின் இன்றைய உண்மையான பலம் என்ன? அவர்கள் இப்போது பின் வாங்குவது உண்மையா?

விடுதலைப்பலிகளின் இன்றை பலம் மட்டுமல்ல ஆரம்பகாலத்திலிருந்தே அவர்களது பலம் வெளியில் எவரிற்குமே தெரியாது. அதுதான் அவர்களது பலம். காரணம் அவர்களிடம் ஆட்பலம் ஆயுத பலத்தைவிட ஆன்மபலமே பல சமர்களின் திருப்பு முனையாக அமைந்தது.
எனவே ஆன்மபலத்தை அளவிடமுடியாது. அடுத்தது புலிகளின் பின்வாங்கல்கள் இதுதான் முதற் தடைவையல்ல. இதற்கு முன்னரும் பலதடைவைகள் பல இராணுவ அதிகாரிகளும். அரசியல் வாதிகளும் இதுதான் புலிகளின் கடைசிக்காலம் என்று அடித்துச்சொன்னபொழுதெல்லாம். அதிசயிக்கத்தக்க விதத்தில் பாய்ந்திருக்கிறார்கள்.

இது நானொன்றும் புழுகவில்லை. புலிகளின் உண்மையான வரலாறு.
இப்படிச் சொன்னவர்
ஆனால் இப்போது
வியாபாரிகளால் வீழ்ந்த என் தலைவா வீரவணக்கம்.
என்ற தலைப்பில்

அவர் எங்கு மறைந்திருந்தாலும் சில நிமிட உரையையாவது பதிவு செய்து சட்டிலைற் தொ.பே மூலம் உலகத்தமிழர்களிற்கு தெரியப்படுத்தி தமது அடுத்தகட்ட நடவடிக்கை என்னவென்று நிச்சயம் அறியத் தந்திருப்பார்..

புலிகளின் வெளிநாட்டு பணியகங்களின் பொறுப்பாளர்களே இத்தனை அசிங்கங்களையும் நிறைவேற்றுகின்றனர்..காரணம் இறுதியாக அவசரகால நிதியென்று புலம்பெயர் தமிழர்களிடம் இவர்கள் சேகரித்த பல மில்லியன் யுரோக்கள் அந்தந்த நாட்டுப்பொறுப்பாளர்களிடமே முடங்கிப்போயுள்ளது.

வெளிநாட்டு தமிழர்கள் மனமுடைந்து போனால் அதனை ஒட்டவைக்க ஆயிரம் வழிகளுண்டு இரண்டு நாள் அழுது விட்டு மூன்றாவது நாள் வழைமைக்கு திரும்பி விடுவார்கள்.

இப்படியாக ஆதாரம் அற்ற அடிப்படை அறிவு அற்ற விதமாக எழுதியது மட்டுமல்லாமல் அதை வேறு அடித்துச் சொல்லுகின்றார்


2.வழுதி

விடுதலைப் புலிகளிடம் இருந்து வன்னி மக்களை காப்பது எப்படி? வழுதி

மேற்குலகிடமும், இந்தியாவிடமும் வேறு எதனை நாம் எதிர்பார்க்க முடியும்...?

கடந்த ஏழு வருடங்களாக - படிப்படியாகத் தமது சுயரூபத்தைக் காட்டி எம்மைச் சீரழித்தது அவர்கள் தானே. எங்களில்

இன்னொரு சாராரோ -

இவ்வளவு காலமும் விடுதலைப் புலிகள் தொடர்பாக புகழ் சொல்லிவிட்டு, இப்போது குறைகள் தேடி புறம் பேசவும் தொடங்கி விட்டார்கள். அது மட்டுமல்லாது -

அந்த "இன்னொரு சாரார்",

விடுதலைப் புலிகளை எப்போதும் விமர்சித்தவர்களுடன் இப்போது சேர்ந்துகொண்டு - விடுதலைப் புலிகளின் கதை இனி முடிந்தேவிட்டது என இப்போது நம்பவும், வெளிப்படையாகப் பேசவும் தொடங்கி விட்டார்கள்.

இப்படிச் சொன்னவர் ஆனால் இப்போது

முன்னாலே சென்றோரின் பின்னால் சென்றவரின் வழியினிலே... ஈழப் போர் - 3!

கடைசிக் காலத்தில் என்னவிதமான சிந்தனைகள் அவரது மனதில் ஓடியிருக்கும் என்ற யோசனை எழுவதை என்னால் தடுக்க முடியவில்லை.

தமிழர் பேராட்டத்தில் நீதியும் தர்மமும் இருந்தும் ஏன் எல்லாம் இவ்வாறு அழிந்து போய் விட்டது என்று யோசித்திருப்பாரா?...

அல்லது -

'நீதியும் தர்மமும் இந்த உலகை இயக்குவதில்லை; வல்லரசுச் சக்திகளின் கேந்திர நலன்கள் சார்ந்து மாறி வரும் உலக ஒழுங்கிற்கு ஏற்ப நாமும் மாற்றங்களைச் செய்து இயங்க வேண்டும்' என்று பாலா அண்ணை திரும்பத் திரும்பச் சொல்லிய ஆலோசனைகளைக் கிரகித்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது என்று நினைத்திருப்பாரா?...

இது முற்றிலும் அப்பட்டமான பொய் ஏன் எனில்

தவிர தேசத்தின் குரலின் வேண்டுகோளில் தான் இச் சமாதானம் வந்ததாகவும் தலைவருக்கு விருப்பம் இல்லாமல் செய்யப்பட்ட ஒரு ஒப்பந்தம் என்றும் பல தடைவைகள் சொல்லப்பட்டது

தலைவர் -தான் சமாதானத்தின் கைதியாக இருக்கின்றேன் என்று பல தடவை சொல்லியிருக்கின்றார்

இப்போது வழுதி முதல் கட்டுரையில் சொன்னது கடந்த ஏழு வருடங்களாக - படிப்படியாகத் தமது சுயரூபத்தைக் காட்டி எம்மைச் சீரழித்தது மேற்குலகமும் இந்தியாவும் தானே.

அல்லது -

வெளிநாட்டுப் பயணங்களை முடிந்துக்கொண்டு ஒவ்வொரு முறையும் தன்னிடம் திரும்பி வரும் தமிழ்ச்செல்வன், மாறி வரும் உலகின் போக்கு பற்றி சரியான தகவல்களைத் தராமல் தன்னைத் தவறாக வழி நடத்திவிட்டார் என்று நினைத்திருப்பாரா?...

இதுவும் முட்டாள் தனமான கூற்று

அல்லது -

உறுதியான ஒர் அரசியல் அடித்தளத்தைப் போடாமல், இராணுவ இயந்திரத்தை மட்டுமே கட்டி வளர்த்ததால் - தமிழினத்தின் அரசியல் விடுதலைக்கான போராட்டத்தை இராணுவ பலத்தை மட்டுமே அடிப்படையாக்கி வளர்த்ததால் - இன்று அந்த இராணுவக் கட்டமைப்பு உடைந்து நொருங்கும் போது - தமிழ்த் தேசிய இனத்தின் எதிர்காலமே நொருங்கி விழுகின்றது என்று உணர்ந்திருப்பாரா?...

இதற்கு புலத்தில் யாரும் இருக்கவில்லையே பச்சோந்திகளைத் தவிர தேசத்தின் குரலின் மறைவிற்கு பின்னர் இல்லாமல் போய் விட்டது

அல்லது -

கடந்த காலங்களில் செய்யப்பட்ட சில விடயங்களைச் செய்யாது தவிர்த்திருக்க வேண்டும் என்றோ, செய்யாது தவிர்த்த சில விடயங்களைச் செய்திருக்க வேண்டும் என்றோ நினைத்திருப்பாரா?..

ஒட்டுக்குழுக்கள் போல் தலைவரும் ஒட்டியிருக்க வேண்டும் என்கிறீர்களா ??

அல்லது -

தவறுகள் பற்றிய எந்தச் சிந்தனையுமே இன்றி - எல்லாவற்றையும் தான் சரியாகவே செய்து, எல்லா முடிவுகளையும் தான் சரியாகவே எடுத்திருந்ததாக நம்பியிருப்பாரா?..

சமாதானத்தின் கைதி ஆக்காமல்,சுனாமி வடிவில் இயற்கை தமிழனுக்கு எதிராயாகாமலும் இருந்திருந்தால்

அவருடைய தீர்க்க தரிசனத்தில் அவரின் பாணியில் விட்டிருந்தால்

இப்போது தமிழீழம் கிடைத்திருக்கும் தமிழர்களின் ஆளுகைக்குள் நிலமும் மக்களும் வந்திருப்பார்கள்

இப்படி வேறு யாரோ கேட்பது போல் தன்னுடைய உட்கிடக்கையை வெளிப்படுத்தியிருக்கின்றார் அதுவும் முன்பு மற்றவர்களை விமர்சித்து விட்டு தானே இப்போது விமர்சிக்கின்றார்

இவர் ஆரம்பம் முதல் இப்படியாகவே பாதிக் கட்டுரை சார்பாகவும் பாதி எதிராகவும் விமர்சித்து ஒரே கட்டுரையில் எழுதும் ஒரே ஒரு பச்சோந்தி இவராகத் தான் இருக்க முடியும்

தொடரும் ,,,,,,,,,




வருகைக்கு நன்றிகள்

என்ன சொல்ல வருகிறது புதி(ர்)னம்?



கடந்த சில வாரங்களாகவே புதிராக இருந்து வந்த புதினம் இணையதளம் தனது அசல் வண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளது. “முன்னாலே சென்றோரின் பின்னால் சென்றவரின் வழியிலே ஈழப்போர்-3” எனும் தலைப்பில் தேசிய தலைவர் பிரபாகரன் பற்றி ஒரு கட்டுரையை இல்லை இல்லை முதல் தகவல் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

முள்வேலிக்குள் மூன்று லட்சம் தமிழர்கள் முடங்கி கிடக்கிறார்கள்...... ஆயிரக்கணக்கானவர்கள் அங்ககீனமாக்கப்பட்டுள்ளனர்....... பட்டியலில் இருந்தே 13,000 பேரை காணவில்லை....... உணவின்றி, மருந்தின்றி நாளும் மக்கள் மடிந்த வண்ணம் உள்ளனர்....... உயிர்கள் ஏதாவது அங்கு எஞ்சி நிற்குமோ என ஏங்கித் தவிக்கிறது உலகத் தமிழினம்.

இவ்வேளையில் பிரபாகரன் குறித்து அகழ்வாராய்ச்சியில் இறங்கியுள்ளது புதினம். கொத்தபாயா, பொன்சேகா, உதய நாணயகரா, ஒக்கலகாமா போன்ற தமிழர் பிணம் தின்னும் கழுகுகள் பிரபாகரன் இல்லையென்று ஒற்றை வரியில் முடித்துக்கொண்டார்கள் ஆனால் புதினமோ பிரபாகரன் இல்லை என்று சொன்னதோடு மட்டுமில்லாமல் கடைசி நேரத்தில் எத்தகைய சிந்தனைகள் அவர் மனதில் ஓடியிருக்கும் என கற்பனை கட்டுரை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அந்தக் கற்பனைக் கட்டுரையின் ஒரு பகுதி இப்படி இருக்கிறது.

கடைசிக் காலத்தில் என்னவிதமான சிந்தனைகள் அவரது மனதில் ஓடியிருக்கும் என்ற யோசனை எழுவதை என்னால் தடுக்க முடியவில்லை.தமிழர் பேராட்டத்தில் நீதியும் தர்மமும் இருந்தும் ஏன் எல்லாம் இவ்வாறு அழிந்து போய் விட்டது என்று யோசித்திருப்பாரா?... அல்லது - 'நீதியும் தர்மமும் இந்த உலகை இயக்குவதில்லை; வல்லரசுச் சக்திகளின் கேந்திர நலன்கள் சார்ந்து மாறி வரும் உலக ஒழுங்கிற்கு ஏற்ப நாமும் மாற்றங்களைச் செய்து இயங்க வேண்டும்' என்று பாலா அண்ணை திரும்பத் திரும்பச் சொல்லிய ஆலோசனைகளைக் கிரகித்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது என்று நினைத்திருப்பாரா?... அல்லது - வெளிநாட்டுப் பயணங்களை முடிந்துக்கொண்டு ஒவ்வொரு முறையும் தன்னிடம் திரும்பி வரும் தமிழ்ச்செல்வன், மாறி வரும் உலகின் போக்கு பற்றி சரியான தகவல்களைத் தராமல் தன்னைத் தவறாக வழி நடத்திவிட்டார் என்று நினைத்திருப்பாரா?... அல்லது - உறுதியான ஒர் அரசியல் அடித்தளத்தைப் போடாமல், இராணுவ இயந்திரத்தை மட்டுமே கட்டி வளர்த்ததால் - தமிழினத்தின் அரசியல் விடுதலைக்கான போராட்டத்தை இராணுவ பலத்தை மட்டுமே அடிப்படையாக்கி வளர்த்ததால் - இன்று அந்த இராணுவக் கட்டமைப்பு உடைந்து நொருங்கும் போது - தமிழ்த் தேசிய இனத்தின் எதிர்காலமே நொருங்கி விழுகின்றது என்று உணர்ந்திருப்பாரா?... அல்லது - கடந்த காலங்களில் செய்யப்பட்ட சில விடயங்களைச் செய்யாது தவிர்த்திருக்க வேண்டும் என்றோ, செய்யாது தவிர்த்த சில விடயங்களைச் செய்திருக்க வேண்டும் என்றோ நினைத்திருப்பாரா?..அல்லது - தவறுகள் பற்றிய எந்தச் சிந்தனையுமே இன்றி - எல்லாவற்றையும் தான் சரியாகவே செய்து, எல்லா முடிவுகளையும் தான் சரியாகவே எடுத்திருந்ததாக நம்பியிருப்பாரா?..
சாவை கண்டு அஞ்சி ஓடும் கோழைகள் மட்டுமே சாவு தன்னை தீண்டும் முன்பு இப்படியெல்லாம் சிந்திப்பார்கள். வீரன் அதுவும் மாவீரன் ஒருபோதும் கட்டுரையாளன் வழுதியை போல் எண்ணியிருக்கமாட்டான்.

சரி என்னதான் சொல்லவருகிறீர்கள் வழுதி?. பிரபாகரன் பாலா(பாலசிங்கம்) சொன்னதை கேட்கவில்லை என்கிறீர்களா? இல்லை தமிழ்ச்செல்வன் பிரபாகரனை தவறாக வழிநடத்திவிட்டார் என்கிறீர்களா? ராணுவபலத்தை மட்டுமே நம்பியதால் பிரபாகரன் வீழ்ந்தார் என்கிறீர்களா? என்னதான் சொல்ல வருகிறீர்கள்?
இது ஏற்கெனவே எங்கேயோ கேட்ட குரல்களாக இருக்கிறதே?
புலிகளின் ராணுவ கட்டமைப்பே உடைந்து நொறுங்கிவிட்டது என வழுதியின் மூலமாகக் கூறும் புதினமே.......
இதையே தான் ராஜபக்சே சொல்கிறான்,
பொன்சேகா சொல்கிறான்
தமிழனாய் பிறந்துவிட்டு இப்படி எழுத கூசவில்லையா?
கூலிக்கு எழுதினால் மட்டுமே கூச்ச நாச்சம் இல்லாமல் எழுத முடியும் நீங்கள் எப்படி……?
அடுத்ததாக அவரின் கடைசி நிமிடங்கள் எப்படி இருந்தது என்று நேரடி வருணனை வேறு வழுதியின் வாயிலாக செய்திருக்கிறது புதினம்.
”உருவங்கள் மாற்றி மறையாமல் - தலைமயிருக்கு கறுப்பு மை பூசி, சீராக முகத்தைச் சவரம் செய்து - கலக்கம் இல்லாமல், ஒழுக்கம் கலையாமல் அவர் இருந்திருக்கின்றார்.அடையாளம் மறைத்து காணாமல் போகாமல் - தான் கனவு கண்ட 'தமிழீழம்' என்ற நாட்டிற்கென அவரே உருவாக்கி - மக்களுக்கு வழங்கிய அந்த 'தேசிய குடிமக்கள் அட்டை'யைத் தன் கழுத்திலே அவர் சுமந்திருக்கின்றார்.மாற்று உடை தரித்து மாயமாய் போகாமல் - தமிழீழத்தின் தேசியப் படைக்கென அவரே உருவாக்கி - தன் போராளிகளை களங்களில் அணியச் செய்த சீருடையை அவர் நேர்த்தியாக அணிந்திருக்கின்றார்.
அந்தப் பணயத்தில் சில தவறுகளைச் செய்யும் சூழ்நிலைக்குள் வரலாறு அவரை நிர்ப்பந்தித்து விட்டது.

சிங்களனும்.......,இந்திய ஊடகங்களும்....... ஒரு சில ஓடுகாலி தமிழர்களும் இதையே தான் சொன்னார்கள்.
நீங்கள் மயிர் பிளக்க நடத்திய இந்த ”ஆராய்ச்சியில்” சொல்லவரும் செய்தி ”பிரபாகரன் பல்வேறு தவறுகளைச் செய்தார்....... அதன் விளைவாக அவரது சாவை அவரே தேடிக் கொண்டுவிட்டார்” என்பது தானே.
பூமிப்பந்தில் பரவிக்கிடக்கும் கோடானுகோடி தமிழர்கள் பிரபாகரன் இருக்கிறார் என ஆணித்தரமாக ஆதாரபூர்வமாக உணர்கிறார்கள். நம்புகிறார்கள், இந்த நம்பிக்கையை தகர்க்கின்ற உரிமை அல்லது நாங்கள் நம்பவே கூடாது என சொல்கின்ற உரிமை உங்களுக்கு மட்டுமல்ல எவனுக்குமில்லை.
அவர் இருப்பது போல மாயத் தோற்றத்தை ஏற்படுத்துவது மக்களுக்கு செய்யும் இரண்டகம்....... துரோகம்....... என கூறுகிறார் கட்டுரையாளர். இந்த மாயத் தோற்றம்....... மாஸ்க் தோற்றம் எல்லாம் செய்தாக வேண்டிய நிர்பந்தம் சிங்களப் பேரினவாதிகளுக்கு இருக்கலாமே ஒழிய மக்கள் விடுதலையை நேசிக்கும் எவருக்கும் இல்லை. எதைச் சொன்னாலும் நம்புவதற்கு மக்கள் மூடர்களும் அல்ல. ஆனால்....... நீங்கள் இப்போது செய்திருப்பதோ கருணாவை விஞ்சிய துரோகம்.

”அவர் விட்ட தலைமைத்துவ இடைவெளியை பொருத்தமான வகையில் நிவர்த்தி செய்து” என்ற வரியில் நீங்கள் யார் என்பதையும் உங்கள் உள்ளமும்,எண்ணமும் என்ன என்பதை அடையாளம் காட்டிவிட்டீர்கள்,
அந்த பொருத்தமானவர் நீங்களா? அல்லது புதினம் முன்னிறுத்த போகும் இன்னொருவரா?

ஆக இந்த கட்டுரை பிரபாகரன் இருப்பையோ ,அல்லது இறப்பையோ உறுதி செய்வதற்காக எழுதப்பட்ட கட்டுரை அல்ல.
தமிழீழ விடுதலை புலிகள் மீதும், தேசிய தலைமை மீதும் காலம் காலமாக சிங்களவர்கள் சுமத்தி வந்த குற்றச்சாட்டுகளை வழிமொழிவதற்காக எழுதப்பட்ட கட்டுரை.
புதிரான புதினமே.......
காத்திருக்கிறோம் நாங்கள்
இனி அடுத்தடுத்து வரப்போகும் பொய்களுக்காக.

நன்றி : நிஜம்