Tuesday, July 14, 2009

"பரபரப்பு" ரிஷி "

பரபரப்பாக" பேசிக்கொண்டிருக்கும் இந்த ரிஷி யார்? ஒரு காலத்தில் காதல் கதைகளை எழுதி தன்னை எழுத்தாளராகக் காட்டிக்கொண்ட இந்த "மகா" எழுத்தாளருக்குப் பின்னால் இருக்கும் மர்ம நபர்கள் யார்..?

ரிஷி யாழ்ப்பாணம் மானிப்பாயின் சுதுமலையைச் சொந்த இடமாகக் கொண்டவர். இவர் சுதுமலையில் இருந்த காலத்தில் காதலிப்பதற்கு கூட பலர் பயந்தார்கள் என்று சொல்லும் அளவிற்கு ஒரு வீரதி வீரனாக சூராதி சூரனாக "பரபரப்பாகத்தான்" இருந்திருக்கின்றார்.

அக்கம் பக்கத்தில் யாராவது காதலித்தால் இவருக்கு கதை கிடைத்துவிடும். அதுவும் நிஜக்கதை. கொழும்பில் இருந்து வெளிவரும் தினபதி பத்திரிகைக்கு அடுத்த வாரமே அந்த நிஜக் காதல் கதை, இவரது கற்பனைகளுடன் இணைந்து பறந்துவிடும். கதையின் நாயகனும், நாயகியும் அந்தக் காதலன் காதலியின் சொந்தப் பெயர்தான். ஆனால், கதையின் முடிவில்தான் சிக்கல்! எழுத்தாளராக தனது பெயரை போடுவதற்கு பதிலாக, அந்தக் கதையில் வரும் உண்மையான காதலனினதோ காதலியினதோ, உறவினரதோ பெயரைப்போட்டு அனுப்பி விடுவார்.

பிறகு என்ன...? பத்திரிகை வெளிவந்து... கதை வெளிவந்து... அந்த காதலர்கள் இருவரின் குடும்பங்களும் வெட்டுக் குத்து என்று போகின்ற அளவிற்கு நிலைமை சென்றுவிடும். சென்றுவிடும் என்ன...? சென்றிருக்கின்றது. கடைசியில் காதலன் - காதலியைப் பிரித்துவைத்த பெருமை இவரைச் சாரும்.

இவ்வாறு மற்றவர்களின் காதல் கதைகளை எழுதி மற்றவர்களை மோதவிட்டு வேடிக்கை பார்த்த இந்த மனிதர் இப்போது வளர்ந்து விட்டார். அதனால், இனங்களை மோதவிட்டு வேடிக்கை பார்த்து மகிழ வெளிக்கிட்டிருக்கின்றார்.

ஆங்கில ஊடகங்களிலும், ஆங்கில நாவல்களில் வெளிவந்த புலனாய்வுக் கதைகளை, கட்டுரைகளை இப்போது தனது பரபரப்புகளில் பெயர், ஊர், நன்றி கூட இல்லாமல் எழுதி வெளியிட்டுக் கொண்டிருக்கும் இவருக்கு யாராவது பெயர், ஊர் கொடுத்தால் பேருதவியாக இருக்கும். தனது சொந்தச் சரக்கு என்று இவர் அடித்துக்கொண்டிருக்கும் தம்பட்டம் கொஞ்சநஞ்சமல்ல. இவரைப் பற்றி இன்னும் விலாவாரியாக எழுதாலாம். இப்போது அதற்கான தேவை எழவில்லை. எனவே, அவற்றை இன்னொரு சந்தர்ப்பத்தில் விலாவாரியாகப் பார்ப்போம். இப்போது இவரது பத்திரிகை குறித்துப் பார்ப்போம்.

புலனாய்வு ரிஷி டட்டடங்க் டுட்டும் டும்டும்..... இசை போட்டு வானொலிகளில் கதை பரப்பியவர். சமாதான காலத்தில் வன்னிக்கு போய் கஸ்ரோவிடம் கதை அளந்துவிட்டு வந்து தொடங்கியதுதான் இந்தப் "பரபரப்பு". தொடங்கப்பட்டது அங்கிருந்து வந்துதான். ஆனால், தொடங்கியதன் நோக்கம் வேறானது. "கவர் ஸ்டோறி"யில் புலிகளின் படங்களை பிரமாண்டமாகப் போட்டு தன்னை புலிகளின் முகவராக இவர் அடையாளம் காட்டிக்கொண்டாலும், புலிகளின் பத்திரிகை இதுதான் என்று சிங்கள ஊடகங்கள் சங்கு ஊதும்போதே பலருக்கும் சந்தேகம் வந்துவிட்டது.

அத்திவாரம் போட்டது யாரோ, கட்டடத்தை கட்டிக்கொண்டிருப்பது யாரோ என்று. அப்பப்ப புலியளை நாசூக்காக கிள்ளியும், உச்சந்தலையில் அடித்தும் கொண்டுவந்த ரிஷக்கு, இப்ப புலிகள் இல்லாமால் போனது நல்ல வசதியாய்ப் போய்விட்டது. மெல்ல மெல்ல தன்ரை முகமூடியைக் கழற்றத் தொடங்கியிருக்கிறார்.

புலிகள் தவறுகள் விடுவதாகச் சுட்டிக்காட்டிக்கொண்டும், தன் ஆலோசனை கேட்டிருந்தால் வென்றிருக்கலம் போன்றுமே இவரது கட்டுரைகள் வடிவம் பெறத் தொடங்கியது. புலிகள் தாக்கும்போது தானே கூடச்சென்று தாக்குவது போல் கதை அளப்பதும் புலிகள் பலம் சற்று ஆட்டம் காணும் போது தன் நிஜ எஜமனர்களுக்குத் தன் விசுவாசத்தைக்காட்ட புலிகளின் பலவீனங்கள் என்று அதிமேதாவித் தனமாக தன் புளுகு மூட்டைகளை மக்களிடம் இறக்கிவைத்து உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று சொல்லிக் கொள்வோரின் மூன்றெழுத்து உளவுத்துறைக்கு விசுவாசம் காட்டுவதுமே இவரின் நிஜமான முகமாகும்.

இரண்டு பத்திரிகைகளை இந்தப் புலம்பெயர்ந்த நாட்டில் நடத்துவது எவ்வளவு சிக்கலான விடயம் என்பது பலருக்கு புரியாட்டியும் சிலருக்குப் புரியும். முக்கியமாக இதில் பொருளாதார வளம். விளம்பர வருமானமே இல்லாம பத்திரிகை விற்பனையை மட்டும் நம்பி இந்த உலகில் எந்தப் பெரிய நிறுவனம் கூட நடத்த முடியாதிருக்கும் நிலையில், ரிஷி பத்திரிகையை விற்றுத்தான் பொருளாதாரத்தை பெறுகிறேன் என்று யாருடைய காதிலாவது பூவைச் சுற்றலாம்.

ஆனால், இந்தப் புலம்பெயர்ந்த (ஓசிப் பேப்பரை விரும்பி வாசிக்கும்) மக்களை நம்பி இரண்டு பத்திரிகைகளை வெளியிடுவதற்கு தேவையான நிதியை இவர் எவ்வாறு தொடர்ச்சியாகப் பெறுகின்றார்..? இரண்டு பத்திரிகைகள் நடத்திறதுக்கான செலவையும் அதற்கான வரவையும் கொஞ்ச நேரம் உட்கார்ந்து கூட்டிக் கழித்து கணக்குப் பார்த்தால் உங்களுக்கே மண்டையில் உள்ள மயிர் கொட்டுண்டாலும் ஆச்சரியப்படுறதுக்கில்லை.

ஆனால், அப்படியெல்லாம் மண்டையை விட்டு யோசிக்காதீர்கள். நிதி எங்கிருந்து வருகின்றது. எவ்வாறு வாரம்தோறும் தவறாமல் "பரபரப்பு" தான் சொல்ல வேண்டிய விடயங்களுடன் வெளிவருகின்றது. காரணம் பெரும் பணமுதலை "கே.பி"யும் அதன் பின்னால் உள்ள இந்திய "றோ"வும் தான். தனது தோள் தட்டிப் பேசும் அளவிற்கு "றோ" அதிகாரிகள் தனக்கு நன்கு பழக்கம் என்பதை, தனது விமான புலனாய்வுப் பயணத்தின்போது இந்திய "றோ" அதிகாரிகள் தன்னுடன் நடந்துகொண்ட விதம் குறித்து தன்னை மறந்து இதே ரிஷி சொல்லிப் பெருமைப்படுவதும் உண்டு.

புலிகளின் தாக்குதல் உத்திகளை அற்புதனின் எறிகணைபோல் எழுதும் இவரது ஆக்கங்களில் உள்ள நம்பகத்தன்மையை பலரும் சந்தேகித்தாலும், புலியைப் புகழ்ந்து பேசுவதாக எண்ணி மௌனமாக இருந்துவிடுகின்றார்கள். புலம்பெயர்ந்த மக்களிட்டை ஒரு ஊடகம் நுழையிறதெண்டால் புலி ஆதரவு இல்லாமல் நுழைய முடியாது. அதனால்தான் புலி ஆதரவோடு வெளிக்கிட்ட "பரபரப்பு", இப்போது எங்கே போய்க் கொண்டிருக்கின்றது?

தொடர்ந்தும் பரபரப்போடு இருப்பவர்களுக்கு இது சொல்லாமலேயே புரிந்திருக்கும். இன்னும் "பரபரப்பாக" வரும்.

-------------------------------------------------------------------------------------------------

துரோகத்தின் தொடர்கதை

ஊரறிந்த துரோகத்தின் முதல் வடிவம்


தேசியத்தலைவருடன், துரோகி மாத்தையா



தலைவரின் பிள்ளை போல் இருந்த துரோகி கருணா


இந்தவழியில் புத்திசாலி "கே.பி" என்ற துரோகியின் தடங்களைப் பார்ப்போம்


துரோகி கே.பி, தலைவரின் திருமணத்தின் போது - தோழனாய்...





துரோகி கே.பி, கடற்புறாப் படகில் தளபதி குமரப்பா மற்றும் ஏனைய போராளிகளுடன்...


துரோகி கே.பி, மணலாற்றுக் காட்டில் தலைவர், பாலா அண்ணர் மற்றும் சங்கர் அண்ணரோடு...

-------------------------------------------------------------------------------------------------

Tuesday, July 7, 2009

துரோகிகளுக்கு எச்சரிக்கை

வெளிநாடுகளில் "நான்கு சுவருக்குள்" இருந்து அறிக்கை விடும் குமரன் பத்மநாதனின் துரோகச் செயற்பாட்டுக்கு ஆதரவும் ஒத்துழைப்பும் தரும் தேசவிரோதிகளுக்கு ஒர் எச்சரிக்கை!

தொடர்ந்தும் இப்படியான தேசவிரோத செயற்பாட்டில் நீங்கள் ஈடுபடுவீர்களேயானால் உங்கள் செயற்பாடுகள் தனிப்பட்ட தங்களின் தீய நடத்தைகளை வெளியிடுவதுடன் தங்கள் புகைப்படங்களும் வெளியிடப்படும்.

மேலும் "நான்கு சுவருக்குள்" இருந்து அறிக்கை விடும் குமரன் பத்மநாதனின் பழைய கூட்டாளிகள் மிகவும் கவனமாக இருங்கள். உங்கள் சாதகமே எங்கள் கைகளில்.


-----------------------------------------------

நோர்வேயில் மக்களைக் குழப்பும் நடவடிக்கையில் ஒரு சில விசமிகள்.

கடந்த பல வருடங்களாக ஒழுக்கவீனம் காரணமாக விடுதலைப்புலிகள் இயக்கத்திலிருந்து ஒதுக்கிவைக்கப்பட்டிருந்த ஒரு நபரின் தலைமையில் சில நபர்கள் தங்களைத் தேசப்பற்றாளர்கள் எனக் காட்டிக்கொள்வதற்காக கே.பியின் ஆதரவாளர்கள் என்ற போர்வையில் இயங்கத்தொடங்கியுள்ளனர். இவர்கள் இரகசியமாகப் பல ஒன்றுகூடல்களை நோர்வேத் தலைநகரம் ஒஸ்லோவில் நடத்தியுள்ளதாக எமது நோர்வே நிருபர் தெரிவித்துள்ளார்.

சமாதான காலத்தின் பின்னர் ஏற்படுத்தப்பட்ட நிர்வாக ஓழுங்கில் பழைய நிர்வாகத்தின் "தில்லுமுல்லு"கள் கண்டுபிடிக்கப்பட்டு அவற்றை சீர்செய்த போதும் சம்பந்தப்பட்டவர்களை இயக்கம் விலக்காது பணிகளை தொடர கேட்டபோதும் தந்திரமாக விலகிக் கொண்ட இந்த விசமிகள் இவ்வளவு நாள் இடைவெளிக்குப்பின்னர் தற்போது தலைகாட்டியிருப்பது "பூனையில்லா வீட்டில் எலி துள்ளி விளையாடுவது" போல் உள்ளது.
இப்படியான பொறுப்பற்ற செயல்கள் விரக்தியில் இருக்கும் மக்களை மேலும் குழப்புவதாகவுள்ளதாக பலர் கருதுகின்றனர்.

இவர்களுக்கு ஏன் இந்த வேலை? நேர்மையாக விடுதலை இயக்கத்திற்காக வேலைசெய்யாமல் தங்களை சமுதாயத்தில் ஒரு பிரமுகர்களாக அடையாளப்படுத்த விரும்பும் இப்படியான முன்னாள் பொறுப்பாளர்களின் (விசமிகள்) பொறுப்பற்ற செயல் என்றைக்குமே மக்களால் ஏற்றுக்கொள்ளப்படப்போவதில்லை.

ஒன்றுபட்டு எமது தேசத்தின் விடிவிற்காய்ப் போராடவேண்டிய இந்தத் தருணத்தில் இவர்கள் தமிழ் சமுதாயத்தையே இரண்டுபட வைக்கின்றனர். நான்கு சுவருக்குள் இருந்து தன்னை தலைவராக பிரகடனப்படுத்தியிருக்கும் குமரன் பத்மநாதனின் அறிக்கைகளையே ஏற்றுக்கொள்ளாத தமிழ்மக்கள் இவர்களையா ஏற்றுக்கொள்ளப்போகின்றார்கள். குமரன் பத்மநாதன் எப்படியெல்லாம் இந்திய உளவுத்துறைக்கு விலை போனாரோ அதே போல் இவர்களும் விலைபோய்விட்டார்கள் என்பது ஏற்கனவே தலமைக்கு தெரியும். மெற்கூறப்பட்ட விசமிகள் அல்லது துரோகிகள் முன்னர் இதே கே.பிக்கு கீழே பணிபுரிந்தவர்கள் தான்.

இன்றைய காலகட்டத்தைப் புரிந்து கொண்டு நாம் அனைவரும் ஒன்றுபட்டு எமது தேசத்தையும் வதைமுகாம்களில் சிக்கிச் சித்திரவதைப்படும் எமது மக்களையும் மீட்டெடுப்பதே புத்திசாலித்தனமாகும். தலைவர் மறைந்துவிட்டார் என்று சொல்லிக்கொண்டு தலைமைப் பதவியை தக்கவைக்க ஒருசிலர் முயற்சிக்கின்றார்கள். இதுதான் சந்தர்ப்பம் இவர்களுடன் ஒட்டிக்கொள்வோம் என நினைக்கும் இந்த நபர்களை நினைத்தால் இரத்தம் கொதிக்கின்றது. இவர்கள் எல்லாம் தலைவர் அவர்களுக்கு விசுவாசமாக பணிபுரிந்தவர்களா?
தேவை ஏற்படும் பட்சத்தில் இந்த நபர்களின் பெயர்களையும் நாம் வெளியிடத்தயங்கமாட்டோம். இன்று நாம் கேட்பதெல்லாம் யாராக இருந்தாலும் தயவுசெய்து மக்களைக் குழப்பவேண்டாம். இந்த நபர்கள் உடனடியாக தங்கள் அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்தவேண்டும்.

தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவில் பணியாற்றிய ஒரு சிலரும் இவர்களுடன் சேர்ந்து பொறுப்பற்றதனமாக நடந்துகொள்வதை நினைக்கும்போது நெஞ்சம்பொறுக்குதில்லை. தங்களின் பதவிகள் போனதும் மற்றவர்களைக் கவிழ்ப்பதிலே குறியாக இருக்கும் இவர்களா எமது தேசத்தின் விடிவிற்காக நேர்மையாக உழைக்கப்போகின்றார்கள்? இவர்களை என்றுமே மன்னிக்க முடியாது. இவர்களுக்கும் டக்ளஸ், சித்தார்த்தன், கருணா, பிள்ளையான் போன்றோருக்கும் என்ன வித்தியாசம். சிந்தியுங்கள். தமிழ் சமூகத்தைப் பிரிக்காதீர்கள்.
தலைவரின் சிந்தனையுடன் புலிக்கொடிக்குக் கீழ் ஒன்றுபடுங்கள். கருத்து வேற்றுமைகள் இருந்தால் பேசித்தீர்த்துக்கொள்ளுங்கள்.
ஒன்றுபடுங்கள் ஒற்றுமையாய்ப் போராடுங்கள்!

நன்றி

நோர்வேயிலிருந்து எமது நிருபர் "சங்கிலியன்"

----------

துரோகிகளின் வழியில் சென்ற வழுதியின் வழியினிலே >>>>>

சென்றவரின் வழியினிலே... ஈழப் போர் - 3! - பாகம் 2
இந்தக் கருத்துக்களம் 'புதினம்' தளத்திற்காக தி.வழுதி அவர்களால் எழுதப்பட்டதாகும்.

அண்மையில் அவர் எழுதியிருந்த "முன்னாலே சென்றோரின் பின்னால் சென்றவரின் வழியினிலே... ஈழப் போர் - 3!" என்ற கருத்துக் களத்தின் இரண்டாவது பாகமாக அவர் இதனை எழுதியுள்ளார்.

வழுதி முன்பு எழுதியதில் "முன்னாலே சென்றோரின் பின்னால் "என்பதை நீக்கி இப்போது வெறும் "சென்றவரின் வழியினிலே... ஈழப் போர் - 3" என்று தலைப்பிட்டிருக்கின்றார்

முன்னர் எழுதியதில் முன்னால் சென்றவர் தேசியத்தலைவர் அவரின் பின்னர் சென்றோர் தமிழர் படை என்று எழுதியிருந்தார்

இம்முறை சென்றவரின் வழியினிலே என்று யாரின் வழியினிலே என்று சொல்லவில்லை

அது கருணாவா , மாத்தயா என்று சொல்லாமல் விட்டுவிட்டார்

கருணாவால் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் கருணா பிதற்றியதை வழுதி பிதற்றி வருகின்றார் அப்படியானால்

வழுதி யாரின் வழியினிலே செல்கின்றார் என்று சொல்லத் தேவையில்லை
அதை காவி வரும் புதினமும் யாரின் வழியினிலே என்றும்

இப்போது இலங்கைத் தீவில் - விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைமைத்துவத்தில் அநேகமாக எல்லோருமே வீரச்சாவு அடைந்து விட்டார்கள்; மிகுதிச் சில பேர் சிறிலங்காவின் தடுப்பு முகாம்களில் அடைபட்டுள்ளார்கள்.

விடுதலைப்புலிகள் யாரும் இல்லை என்றால் தேசியத் தலைவர் இல்லை என்று யார் உங்களுக்கு உறுதிப்படுத்தியது ???

சிறிலங்கா இராணுவமா அல்லது
ரோவா அல்லது
கருணாவா அல்லது
தேசியத் தலைவரின் ஆவியா ??

வழுதி தன்னுடைய அறிவுரைகளை தேசியத் தலைவர் கேட்டிருந்தால் இன்று தமிழீழம் கிடைத்திருக்கும் என்பது போலவும் தமிழ்மக்களது படுகொலைகள் நிறுத்தப்பட்டிருக்கும் என்பது போலவும்

தேசியத் தலைவர் மக்கள் கொல்லப்படுவதைப் பற்றி எல்லாம் கவலைப்படவில்லை தானும் பத்மநாதனும் தான் கவலைப்பட்டோம் என்பது போல்

மீண்டும் தேசியத் தலைவரின் மேல் சேறு பூசும் தனது குழி பறிக்கும் வேலையில் தமிழ்மக்களின் காவலனாக காட்டிக்கொண்டு தமிழ்மக்களுக்கு குழி வெட்டுகின்றார்

இவர் எப்போதுமே சில தமிழ் மக்களின் சமகால நடவடிக்கைகளை காட்டி அதற்கு சார்பாக ஒன்றை எழுதி விட்டு பின்னர் அதனுடன் தனது சகுனி வேலையையும் இணைத்து விடுவது இவரின் சாதூரியம்

ஆனால் அதுவே இவரின் பச்சோந்தி தனத்தையும் காட்டிவிடுகின்றது

துரோகிகள் எப்போதுமே தமிழ்மக்களில் அக்கறை உள்ளவர்கள் போலும் தாம் புலிகளுக்கு மட்டுமே எதிரிகள் என்பது போலும் வழுதி வரை எழுதியும் நடித்துக்கொண்டும் இருக்கின்றார்கள்

இவர்களுக்கு புலி எதிர்ப்பைத் தவிர வேறு ஒரு மண்ணும் கிடையாது

வழுதி விடுதலைப்புலிகளால் அறிவிக்கப்படாத பிரநிதியாக தன்னைத் தானே அடையாளப்படுத்தி தானும் இறுதி வரை புலிகளின் வாரிசு ஆக காட்டுகின்றார்


வழுதி சாதிக்க முயல்வது என்ன ???

1. தேசியத் தலைவரை மக்களின் மனங்களிலிருந்து அகற்றுவது -

தேசியத் தலைவரை சாகடிக்க மேற்கொண்ட எவையும் எடுபாடாது போனதால் அவரை தமிழர்களது மனங்களில் இருந்து அகற்றினால் அவர் உயிருடன் இருந்து ம் பயனற்றவர் ஆகிவிடுவார்

அதற்கு அவரை துதி பாடி பின்னர் அவரின் மேல் சிறிது சிறிதாக சேறு பூசுவது

இதற்காகத் தானா சிறிலங்கா காட்டிய உடலில் சேறு பூசி வைத்திருந்தார்களோ என்னவோ ??

2. தனது சகுனி வேலைகளையும், உண்மைகளையும் கலந்து எழுதுவதனால் இரண்டையும் தமிழ்மக்கள் நம்பாமல் செய்ய முற்படுவது

- தமிழ்மக்களை தொடர்ந்தும் குழப்பநிலையிலேயே வைத்திருந்து மந்த நிலைக்கு மாற்றுவது

இளந்திரையனின் இறுதிப் பேட்டியில் சொன்னது போல்

மக்கள் பாலையும் தண்ணீரையும் பிரித்தறியும் பக்குவம் உடையவர்களாக இருக்கவேண்டிய கட்டாயத்திலிருக்கின்றோம்

தமிழ்மக்கள் இப்போது யாரையும் நம்ப முடியாத கையறு நிலையில் வைத்திருக்க முயலுகின்றார்கள்


இவர்களின் கடந்தகால வரலாறு என்ன என்பது பற்றியும் சிந்தியுங்கள்.


தமிழ்மக்கள்மேல் அக்கறைகொண்டவர்களாக நடிக்கின்ற இக்கூட்டம்


ஏமாறுபவர்கள் இருக்கும் வரைக்கும், ஏமாற்றுபவர்கள் இருந்துகொண்டே இருப்பார்கள்

ஆகவே தமிழர்களின் சுய மரியாதையுடனான வாழ்வுக்கு வழிகாட்டும் கொள்கை வகுப்பின் கீழ்
தேசியத் தலைமையின் வழிகாட்டலில் செல்வோரின் பின்னால் ஒன்றிணைவோம்

மக்களே தலைவர் துரோகிகளைப்பற்றி கூறிய

"எதிரிகளைவிட துரோகிகளே ஆபத்தானவர்கள்"

என்ற சிந்தனையை நிலைநிறுத்தி துரோகிகளை ஒதுக்கி எமது இலட்சியத்தை நோக்கி முன்னகர்வோம்.

12 நாட்களில் தலைவருக்கு மீசை அடர்த்தியாக வளர்ந்தது எப்படி?

திகதி: 03.07.2009 // தமிழீழம்
வன்னிக் களமுனையில் இறுதியாக என்ன நடந்தது? தமிழீழத் தேசியத் தலைவர் குறித்து உண்மை நிலை என்ன என்பவற்றை இன்று வெளியாகியுள்ள ஈழமுரசு வெளியிட்டுள்ளது.
தங்களுக்கு கிடைத்த நம்பத்தகுந்த தகவல்களின் அடிப்படையில், 'மக்கள் அறிந்த போராளி' ஒருவர் ஊடாக இந்தத் தகவல்களைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ள ஈழமுரசு, இதுதொடர்பாக விரிவான செய்தியொன்றை வெளியிட்டுள்ளது.

ஈழமுரசு வெளியிட்டுள்ள அந்தச் செய்தியை இங்கே தருகின்றோம்.
தமிழீழத் தேசியத் தலைவர் இருக்கிறாரா? இல்லையா? என்ற பெரும் வாதப்பிரதிவாதங்கள் இன்னும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இருக்கின்றார் என நம்பும் ஒரு பகுதியினரும் இல்லை என மறுத்து அறிக்கைவிடும் கூட்டத்தினருக்கும் மத்தியில் தலைவர் தொடர்பான உண்மைத் தகவல்களையும், களமுனையில் இறுதியாக என்ன நடந்தது என்பது பற்றியும் அறிந்துகொள்வதற்கு ஈழமுரசு கடந்த பல நாட்களாக எடுத்த பல்வேறு முயற்சிகளின் வெற்றியாக களமுனையில் இருந்து நம்பகத்தகுந்த பல தகவல்களைப் பெற்றுள்ளோம்.

களமுனையில் கடந்த 18.05.2009 அன்றுவரை போராடிக்கொண்டிருந்த போராளி ஒருவருடன் ஈழமுரசு அண்மையில் தொடர்புகளை ஏற்படுத்தி நடந்த சம்பவங்களை அறிந்துகொண்டுள்ளது. அந்தத் தகவல்களை வழங்கிய ‘மக்கள் அறிந்த அந்தப் போராளியை' தற்போதையை சூழ்நிலையில் எம்மால் இனம்காட்டிக்கொள்ள முடியவிட்டாலும், கால ஓட்டத்தில் ஒருநாள் அவரை அடையாளம் காட்டமுடியும் என்றே நம்புகின்றோம்.

சிறீலங்கா இராணுவத்தினரால் வெளியிடப்பட்ட எந்த நிழற்படங்களையும் இதுவரையும் அவர் பார்த்திராதபோதும், தலைவரை இறுதியாக தான் கண்டபோது இருந்த அவரது தோற்றம் தொடர்பாக, அந்தப் போராளி வழங்கிய தகவல்கள் தலைவர் எனக்கூறி சிறீலங்கா வெளியிட்ட நிழற்படங்கள் போலித்தனமானவை என்பதை அப்பட்டமாகப் புரியவைத்தன.
அவருடனான எமது உரையாடிலின்போது பகிர்ந்துகொண்ட விடயங்களை இங்கே தொகுத்து தருகின்றோம்.

மே மாதம் 4ம் திகதி அல்லது 5ம் திகதியா என்பது சரியாக நினைவில் இல்லை. இந்த இரண்டு தினங்களில் ஒன்றில்தான் தலைவரை இறுதியாக நான் சந்தித்திருந்தேன். அன்றைய தினம் தலைவருடன் ஒரு சந்திப்பு நடைபெற்றது. உண்டியலடிக்கு வருமாறு வந்த அழைப்பை அடுத்து போராளிகள் அங்கு சென்றிருந்தோம். அப்போது அங்கு சுமார் ஒன்பது வரையான உந்துருளிகளில் ஒரு அணியொன்று வந்து சேர்ந்தது.

ஒரு உந்துருளியில் தலைவரும் பொட்டம்மானும், ஏனையவற்றில் அவர்களது மெய்ப்பாதுகாவலர்களும் இருந்தனர். தலைவர் தலைக்கவசம் (கெல்மட்) அணிந்திருந்தார். வழமைபோலவே போராளிகளுடன் உரையாடியவர், தாக்குதலுக்கான திட்டங்களையும் வழங்கினார். அப்போது தலைவர் முழுமையாக முகச்சவரம் செய்திருந்தார். அவரது மீசை கூட மளிக்கப்பட்டிருந்ததை என்னால் உறுதியாகக் கூறமுடியும்.

ஆனால், நீங்கள் சொல்லவதுபோல் சிறீலங்கா இராணுவத்தினரால் வெளியிடப்பட்ட படத்தில் அடர்த்தியாக மீசை உள்ள தலைவரின் உருவம் வந்திருக்க வாய்ப்பில்லை. பத்து, பன்னிரண்டு நாட்களில் அவ்வளவிற்கு மீசை வளர்ந்திருக்கும் என்பதை என்னால் நம்பமுடியவில்லை. அத்துடன், அன்றைய சந்திப்பின் பின்னர் எங்களுக்கு கிடைத்த தகவலின்படி தலைவர் அந்த முற்றுகைப் பகுதியில் இருந்து வெளியேறிவிட்டார்.

சுமார் 45 முதல் 50 வரையான கரும்புலித் தாக்குதல்கள் நடத்தப்பட்டே படையினரின் முற்றுகைகள் உடைக்கப்பட்டு நந்திக்கடல் ஊடாக இந்த வெளியேற்றம் நிகழ்ந்ததாகவும், இதன்போது ஆயிரம் வரையான படையினர் கொல்லப்பட்டிருந்ததாகவும் களமுனையில் போராளிகளிடையே பரவலாக செய்திகள் இருந்தன.

தலைவர் இறுதி வரையும் நின்று போராடப் போவதாகவே கூறிக்கொண்டிருந்தார். ஆனால், போராளிகளும் தளபதிகளும் அவரை அங்கிருந்து வெளியேற வேண்டும் என்றே வலியுறுத்தி கேட்டு வந்தனர். ஒரு கட்டத்தில் தலைவர் வரவிட்டால் மயக்க மருந்து செலுத்தித்தான் கொண்டுபோவோம் என்று சொல்கின்ற அளவிற்கு நிலைமை இருந்தது.

இதேவேளை, சண்டை மிகவும் இறுக்கமடைந்திருந்த நிலையில் வெளி மாவட்டத்தில் இருந்து இரண்டு அணிகளுடன் வரவுள்ளதாக தலைவருக்கு தளபதி ஒருவரிடம் இருந்து தகவல் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், அதனை ஏற்றுக்கொள்ள மறுத்த தலைவர், அணிகளைச் சிதைக்காமல் அந்ததந்த இடங்களிலேயே தக்க வைத்துக்கொண்டிருக்குமாறு பணித்திருந்தார்.

தலைவர் அங்கிருந்து வெளியேறியிருந்தபோதும், தம்பிதான் இறுதிவரை எங்களுடன் களமுனையில் நின்றிருந்தார். தலைவரின் மகன் சாள்சைத்தான் அவர் தம்பி என்று குறிப்பிட்டார். அவரது மகள் துவாரகாவும் கையில் காயமடைந்த நிலையிலும் களமுனையில் போரிட்டுக்கொண்டிருந்தார் என்பதை அறியமுடிந்தது.

ஆனந்தபுரம் தாக்குதலில் கேணல் தீபனும், கேணல் கடாபியும் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர். இறுதிச்சமர் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது காயமடைந்த கேணல் சொர்ணம் அவர்களும் சயனைட்டை உட்கொண்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். கேணல் ஜெயமும் கேணல் சூசையும் களமுனையில் இருந்து போராளிகளை பெரும் கடல் வழியாக படகுகளில் வெளியேற்றிக்கொண்டிருந்தனர்.

கேணல் ஜெயம் அவர்கள் அரைக் காற்சட்டையுடன் (ஜம்பர்) கடற்கரையில் நின்று பணிகளில் ஈடுபட்டதை காணக்கூடியதாக இருந்தது. தலைவர் வெளியேறிச் செல்வதற்கு வசதியாக அவர்கள் படையணிகளை முன்னதாகவே வேறு பகுதிகளில் கடலால் கொண்டு சென்று தரையிறக்கி வழியமைத்துக்கொண்டிருக்கின்றார்கள் என்பதை அறியமுடிந்தபோதும், அவர்கள் எங்கே தரையிறக்கப்படுகின்றார்கள் என்பதை என்னால் அறியமுடியவில்லை. எனினும், கொக்குத்தொடுவாய் பக்கமே அவர்கள் சென்று தரையிறங்கியிருக்க வேண்டும். பின்னர் ஜெயமும் அங்கிருந்து வெளியேறிவிட்டதாக என்னால் அறியமுடிந்தது.

கேணல் பானு அவர்களும் களமுனையில் நின்றிருந்தார். எனினும், அவர் கையில் காயமடைந்திருந்ததால் அதற்கான சிகிச்சையைப் பெற்றுக்கொண்டிருந்தார். (கேணல் பானு எனக்கூறி வெளியிடப்பட்டிருந்த படத்தில் அவரது கையில் எந்தக் காயமும் இருக்கவில்லை. அத்துடன், அவர் ஏற்கனவே வயிற்றுப் பகுதியிலும் காயமடைந்திருந்தார். வெளியிடப்பட்டிருந்த படத்தில் அந்தக் காயமும் இருக்கவில்லை.)

இறுதியாக, 15ம் திகதி முள்ளிவாய்க்காலில் இருக்கும் விடுதலைப் புலிகளின் அனைத்து ஆவணங்களையும், கணினிகளையும் அழித்துவிடுமாறு எங்களுக்கு தகவல் வந்தது. குறிப்பாக வெளிநாடுகளில் உள்ளவர்கள் தொடர்பான ஆவணங்களை முற்றாக அழிக்குமாறு தலைவர் அந்தச் சந்திப்பின்போது வலியுறுத்தியிருந்தார்.

இதனால், இராணுவத்தினர் எப்போதும் முள்ளிவாய்காலில் நுழையலாம் என்ற நிலையில், இருக்கின்ற அனைத்துப் பொருட்களையும் கொண்டுபோய் ஒரு இடத்தில் குவித்து வைத்து தீ வைத்தோம். பெரும் பிரதேசத்தில் அந்தத் தீ கொளுந்துவிட்டு எரிந்தது.

அப்போது இராணுவத்தினர் எமக்கு மிக அருகில் நெருங்கியிருந்தனர். இந்நிலையில், வாகனத்தில் ஏற்றப்பட்டிருந்த இன்னொரு ஆவணத் தொகுதியையும் அழிக்கவேண்டியிருந்தது. அந்த வாகனத்தில் ஏற்றப்பட்ட ஆவணங்களுக்கு தீ வைத்துவிட்டு திரும்பியபோது, இராணுவத்தினர் ஏற்கனவே தீ வைக்கப்பட்டு எரிந்த பகுதிக்குள் நுழைந்துவிட்டிருந்தனர். இறுதியாகவே நான் அங்கிருந்து வெளியேறினேன்.

----------------------------

சொல்லாமல் போகார் எம் தலைவர்

திகதி: 04.07.2009 // தமிழீழம்

தலைவர் இருக்கின்றாரா இல்லையா என்ற ஆய்வுகள் என்னைப் பொறுத்தவரை தேவையற்றவை என்றே நான் கருதுகின்றேன். தமிழ் மக்களை ஒன்றிணைத்து ஒரு மாபெரும் சக்தியாக வளர்த்தெடுத்து, தமிழர் தாயக தேசத்தை எவ்வாறு வென்றெடுக்க வேண்டும் என்பதை தமிழினத்திற்கு தலைவர் மிகத் தெளிவாக கூறிவைத்திருக்கின்றார்.
எனவே, தலைவர் இருக்கின்றாரா இல்லையா என்ற விவாதங்களைத் தவிர்த்துவிட்டு தலைவர் காட்டியுள்ள வழியில் சென்று தாயகத்தை வென்றெடுப்பதே இன்றைய நிலையில் தமிழ் மக்களின் காலப்பணியாக இருக்கவேண்டும்.
ஆனாலும், தங்களது சுய நலன்களுக்காக தலைவரை இந்திய, சிறீலங்கா அரசுகளைவிட பலமுறை தங்கள் அறிக்கைகளில் கொன்றுகொண்டிருக்கும் நம்மவர்களுக்காக இங்கே சில கருத்துக்களை நான் முன்வைக்கலாம் என்ற உணர்விலேயே பால்ராஜ் அண்ணையின் இந்தத் தொடரின் ஊடாக, கடந்த காலங்களில் நிகழ்ந்த சில விடயங்களை எமது மக்களோடு இந்தக் கால நேரத்தில் பகிர்ந்துகொள்ளலாம் என்று நினைக்கின்றேன்.
தலைவர் எப்போதும் தன்னையொரு தலைவராக வைத்துக்கொள்ள விரும்பியதில்லை. ஒரு போராளியாக வாழவே அவர் எப்போதும் விரும்புபவர். ஒரு போராளியாக வாழ்ந்து, ஒரு போராளியாக களமுனையில் எதிரியுடன் மோதி வீரச்சாவைத் தழுவுவதே கௌரவமான சாவு என்று கருதுபவர்.

இதற்கு பல ஆதரங்களை இங்கே முன்வைக்க முடியும். 1987ம் ஆண்டுகளில் அனுபவ ரீதியாகக் கண்ட சில விடயங்களை இந்த இடத்தில் ஆதாரமாக வைக்கலாம் என்று நினைக்கின்றேன்.

பேச்சுவார்த்தைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தலைவர் டில்லியில் அசோகா விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்தார். விடுதலைப் புலிகள் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என்பதை அங்குவைத்து இந்திய அதிகாரிகள் தலைவரிடம் எச்சரித்தே கூறியிருந்தனர். வெளியுலக தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருந்த நிலையில் ஆயுதங்களை ஒப்படைப்பது குறித்து தலைவர் போராளிகளுக்கு அறிவிக்கவேண்டும் என அவர்கள் கூறியிருந்தார்கள்.
ஆனால், அவர்களின் கைகளில் மிகவும் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இருந்தபோதும் அங்கு காவலுக்கு நின்ற கறுப்பு பூனைகள் படைப்பிரிவின் ஊடாகவே தலைவர் தாயகத்தில் உள்ள போராளிகளுக்கு ஒரு தகவலை அனுப்பியிருந்தார்.

அந்தத் தகவலில் அவர் மிகத் தெளிவாக ஒரு விடயத்தை சொல்லியிருந்தார். அதாவது,
'தான் நேரில் வராமல் யாரும் ஆயுதங்களை ஒப்படைக்கக்கூடாது. அவ்வாறு ஒலி நாடாவில் எனது குரலோ, அல்லது ஒளிநாடாவிலோ நான் கதைத்த பதிவுகளை யாராவது கொண்டுவந்து தந்தாலும் அதனை ஏற்றுக்கொண்டு ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டாம்.
நான் நேரில் வந்து உங்களிடம் சொல்லும் வரைக்கும் யாரும் ஆயுதங்களை ஒப்படைக்கக்கூடாது. அதனையும் மீறி இந்திய இராணுவத்தினர் வந்தால் தாக்குதலைத் தொடங்குங்கள். அவ்வாறு இந்திய இராணுவத்தினருடன் மோதுவதற்கு விருப்பம் இல்லாதவர்கள், ஆயுதங்களை வைத்துவிட்டு போகலாம்'
என்பதையும் இந்தியாவின் முற்றுகைக்குள் இருந்துகொண்டும் தலைவர் உறுதியாக அறிவித்திருந்தார்.

பின்னர், தலைவர் நேரில் வந்து அறிவித்ததன் பின்னரே ஆயுத ஒப்படை நிகழ்ந்தது என்பது வரலாறு.இப்படிப்பட்ட தலைவர், எந்த மக்களுக்காக போராடுகின்றாரோ அந்த மக்களுக்கு எந்தவொரு கருத்தையும் நேரிலோ, ஒளிப்பதிவாகவோ சொல்லாமல், முகம் தெரியாத ஒருவரை நீங்கள் தலைவராக ஏற்றுக்கொள்ளுங்கள் என்று அறிவித்துவிட்டு சென்றுள்ளாரா என்பதை இந்தச் சம்பவத்துடன் ஒப்பிட்டு பார்த்தால் புரிந்துகொள்ள முடியும்.

இதேவேளை, தலைவரின் பாதுகாப்பு எப்போதும் தலைவரின் கையில் இருந்ததில்லை. இதனை அடுத்துவரும் வாரங்களில் பார்ப்போம்.

ஈழமுரசு இதழில் முன்னாள் போராளி ஒருவர் எழுதிவரும் தொடரில் இடம்பெற்றுள்ள ஆக்கம் இது.

நன்றி - ஈழமுரசு
---------