Tuesday, June 16, 2009

வழுதி <---> புதினம் -மறுபக்கம்

உண்மையான பெயர்: பரந்தாமன்


தற்போதைய வசிப்பிடம்: அமெரிக்கா


எதிரிகள்: தலைவர் பிரபாகரன், தமிழ்செல்வன், அதியமான்


முழுநேரப்பணி: மேற்கண்டவர்களை தூற்றுவது


காரணம்: தனது காம இச்சைகைளையும், பணத் தில்லுமுல்லுகளையும்கண்டு பிடித்து விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து வெளியேற்றியமை.


புதினம் இணையத்தளத்தில் வழுதி என்பவர் 'முன்னாலே சென்றோரின்..." என்ற தலைப்பில் ஒரு கருத்தாய்வு கட்டுரை என்ற தலைப்பில் தலைவர் பிரபாகரன் அவர்களை கடுமையாக விமர்சித்து இருந்தார்.

பல ஆண்டு காலமாக தமிழீழ விடுதலைப் போராட்டதுக்கு ஆதரவு நிலை போல காட்டி வந்த புதினம் இணையத் தளத்தின் புலிச்சாயமும் இந்த கட்டுரையையுடன் வெளித்துப்போனது.


வழுதி என்பவர் யார்?

இவர் இவ்வாறான கட்டுரை எழுதவேண்டிய காரணம் என்ன?
என்ற கேள்விக்கு விடை காண்பதே இந்த கட்டுரை.

வழுதி என்ற புனைப்பெயரைக்கொண்ட பரந்தாமன் முன்னைய அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வநோடு அரசியல் துறையில் பணியாற்றியவர். இவர் பெண்களோடு தவறான நடத்தையில் ஈடுபட்டமை, நிதி விவகாரங்களில் பெரும் மேசடி செய்தமை போன்ற காரணங்களினால் தமிழ்ச்செல்வன் இவரை தன்னுடன் பணிக்கு வைத்திருக்க முடியாது என வி.பு தலைமைக்கு தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து தலைமைப்பீடம் புலனாய்வுத்துறையிடம் பரந்தாமன் (வழுதி) பற்றி விளக்கம் கேட்டது. பரந்தாமன் (வழுதி) பற்றி முழுமையான விசாரித்தும் பின்தொடரும் பணியிலும் இருந்தவர், புலனாய்வுத்துறை சார்ந்த அதியமான்.

இவர் தனது அறிக்கையில் தமிழ்ச்செல்வன் கூறியவையை உறுதிப்படுத்தியது மட்டுமல்லாது தமிழ்ச்செல்வன் குறிப்பிடாத பல செய்திகளையும் தலைமைக்கு தெரிவித்தார். அத்தோடு இவரை மேலும் இயக்கத்தில் அனுமதிக்க முடியாமைக்கு உரிய காரணங்களையும் குறிப்பிட்டார். இவருக்கான தண்டனை பற்றி தலைமைப்பீடம் யோசித்து வந்தபோது.

தலைவர் குறுக்கிட்டு இவர் நீண்ட காலம் பணியாற்றியமையை கருத்தில் கொண்டு குறைந்த தண்டனையுடன் இவரை இயக்கத்தில் இருந்து நீக்கி செலவுக்கு பணமும் கொடுத்து அனுப்பினார். ஆனால் சிறீலங்கா தவிர்ந்த ஏனைய நாட்டில்தாலன் பரந்தாமன் ஐந்து ஆண்டுகள் இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

வழுதியின் வேண்டுதலுக்கு இணங்க இவரை அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தார் தலைவர்.

நாட்டை விட்டுவெளியேறியதும் பரந்தாமன் என்ற வழுதி மேற்கண்டவர்கள் மேல் வக்கிரம் கொள்ள ஆரம்பித்தார்.

இவ்வளவு சம்பவங்களும்தான் வழுதி (பரந்தாமன்) புதினம் இணையத்தளத்தில் தலைவர் பிரபாகரன் அவர்களை விமர்சிக்க காரணமாக இருந்தது.

புதினம் இணையத்தளம் இக்கட்டுரையை ஏன் வெளியிட்டது....

புதினம் இணையத்தளம் அவுஸ்திரேலியாவில் இருந்து கரன் என்பவரினால் இயக்கப்பட்டுவருகின்றது. இவர் ஒரு விடுதலைப் புலி ஆதரவாளர் கிடையாது. இவர் சாந்திருக்கும் நபர்களில் பெரும்பாலனவர்கள்


புலி எதிர்ப்பாளர்கள். அவரின் முக்கிய நண்பவர்கள் சிலர் விவரம்:


ஜெப்றி உதுமான் லெப்பை
தென்புலோலியூர் கிருஸ்ணலிங்கம்
பரபரப்பு ரிசி


ஜெப்றி உதுமான் லெப்பை என்பவர் ஒரு கருணாவுடன் தொடர்புடைய கிழக்குமாகாண இஸ்லாமியத் தமிழர்.கொம்பியுற்றரர் பள்ளி வைத்திருக்கும் இவர் பரம புலிஎதிர்ப்பாளர். தென்புலோலியூர் கிருஸ்ணலிங்கம் என்பவர் கனடியத்தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் எனற வானொலியில் செய்தி படிக்கும் புலி எதிர்பாளர். இவர் இலங்கை போக்குவரத்து சபையில் இருந்தபோது மதுபோதையில் பெண்களுடன் தீய நடத்தையில் ஈடுபட்ட காரணத்தால் புலிகளால் தண்டிக்கப்பட்டவர். பரபரப்பு பத்திரிகை பதிப்பாளர் ரிசி இவர் கனடியத்தமிழ் ஒலிபரப்பு கூட்டுதாபனத்தில் பணியாற்றும்போது கரனுக்கு பழக்கம் ஏற்பட்டு இன்றுவரை தொடர்கிறது. இவர் புலி ஆதரவு போல் வேடம்போடும் புலி எதிர்பாளர். கனடியத் தமிழ் மக்களிடம் விசாரித்தால் இவர் பற்றி புரியும். எயார் கனடா நிறுவனம் மற்றும் வெளிநாட்டு உளவு அமைப்பு ஒன்றுடன் பணியாற்றிவருபவர்.

தன்னை புலிகள் வன்னிக்கு அழைத்தாகவும் தான் அங்கு சென்று அவர்களுக்கு புலனாய்வு குறித்து பாடம் எடுத்ததாகவும் கூறிவருகிறார்.

ஆனால் கனடாவில் இவருடைய பத்திரிகையில் வந்த புலி எதிர்ப்பு கட்டுரைகளால்.... பல கடைகளில் இப் பத்திரிகை தற்போது விற்பனையில் இல்லை என அறியமுடிகிறது.

கரன் நடத்திவரும் மற்றய இணையத்தளமான 'தமிழ்நாதம்" என்ற இணையத்தளத்தை பார்த்தால் புரியும் பரபரப்பு பத்திரிகை ரிசிக்கும் அவருக்கும் உள்ள தொடர்பு.

கரன் இந்தக் கட்டுரையை வெளியிடுவதற்கு முக்கிய காரணம் ஒன்றும் உண்டு.

கரன் ஆரம்பித்து நடத்தி வந்த புதினம் இணையத்தளம் விடுதலைப் புலிகளின் இணையத்தளம் போன்று மக்களுக்கு தோற்று வததால் அந்த இணையத்தளத்தை

தமக்கு தருமாறு விடுதலைப் புலிகள் கேட்டனர் ஆனால் கரன், இதுதான் தனது வாழ்வு ஆதராம் தான் பிழைப்பும் இல்லாமல் இதனை நம்பியே பிழைப்பு நடத்துவதாகவும் புலிகளுக்கு தெரிவித்து விட்டார்.

இந்தப் பிரச்சினையால் இவருக்கு செய்திகொடுப்பதை புலிகள் குறைத்துக் கொண்டு. ஜேர்மனியிலும் கனடாவிலும் இருந்து இயங்கும் இரு இணையத்தளங்களை அமைந்து திறம்பட தற்போதும் நடத்தி வருகின்றனர்.

இவைதான் முற்றிலும் வழுதிய தலைவர் பிரபாரகன் அவர்களை தூற்றியமைக்கும் புதினம் இணையத்தளம் அதனை வெளியிடுவதற்குமான காரணங்கள்.


ஆய்வு:
செல்வக்குமரன் சிற்றப்பலம் (கனடா)

2 comments:

  1. கரனின் நட்பு வட்டாரத்தில் எமக்குத் தெரிந்த இன்னுமொருவரையும் இங்கே சேர்த்துக் கொள்ளலாம் என்று நினைக்கின்றேன். தெய்வீகன்: இவர் ஈபிடிபி ஆதரவாளர். ஆனால் வெளிப்படையாக விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாளனாகக் காட்டிக்கொண்டு மறைமுகமாக ஈபிடிபியின் கையின் கைக்கூலியாக செயற்படுபவர். இவருடைய மாமா ரவி என்பவர் மெல்பேர்ணில் ஒரு சட்டத்தரணி மற்றும் ஈபிடிபி முக்கிய உறுப்பினர். இவரின் கட்டளையின் பேரில் தமிழ இளையோர் அமைப்பைக் கைப்பற்ற முயன்றவர். அது கைகூடாமற் போய் இவருடைய முகத்திரை கிழிகின்ற நேரத்தில் 3 நாள் பால் மற்றும் தோடம்பழச்சாறு குடித்துக்கொண்டு உண்ணாவிரதம் இருந்து தான் விடுதலைப் புலி ஆதரவாளன்தான் என்று நிருபிக்க முயன்றவர். இவர் தமிழ்நாதம் மற்றும் புதினத்துக்கு பல புனைபெயர்களில் கட்டுரையெழுதுவதுடன் மெல்பேர்ணிலிருந்து புலி எதிர்ப்புக் கைக்கூலிகளால் நடத்தப்படும் (தெய்வீகனின் மாமாவும் இதில் பங்குதாரர்) உதயம் (உதயன் அல்ல)என்ற தமிழ் எதிர்ப்பு பத்திரிகையிலும் இவருடைய கட்டுரைகள் வருவதுண்டு. இவருடைய எழுத்து நடை தெளிவாகத் தெரிந்தவர்களுக்கு அவருடைய புனைபெயரை கட்டுபிடிக்க முடியும். சிலவேளைகளில் அவருடைய மாமியின் பெயரிலும் அவர் கட்டுரை எழுதுவதுண்டு. அண்மையில் வழுதியின் கட்டுரை தொடர்பாக இன்பத் தமிழ் வானொலியில் எதிர்ப்புத்தெரிவித்து ஒரு விவாதத்தை ஆரம்பித்தபோது வழுதிக்கு ஆதரவாகவும் அந்தக் கட்டுரையில் உள்ள விடயங்கள் உண்மைதான் என்று கதைத்து பாலசிங்கம் பிரபாகரனிடம் மூக்குடைபட்டவர். வெளிப்பார்வைக்கு புலி ஆதரவாளனாகக் காட்டிக்கொண்டு இயக்குங் ஒற்றன் தெய்வீகன். ஆகவே மக்களே தலைவர் துரோகிகளைப் பற்றி கூறியதை (எதிரிகளைவிட துரோகிகளே ஆபத்தானவர்கள்) மனதில் நிறுத்தி நாங்கள் விழிப்புடன் செயற்படவேண்டும்.

    ReplyDelete
  2. 1.வழுதி என்ற புனைப்பெயரைக்கொண்ட பரந்தாமன் முன்னைய அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வநோடு அரசியல் துறையில் பணியாற்றியவர். இவர் பெண்களோடு தவறான நடத்தையில் ஈடுபட்டமை, நிதி விவகாரங்களில் பெரும் மேசடி செய்தமை போன்ற...?
    2.தலைவர் குறுக்கிட்டு இவர் நீண்ட காலம் பணியாற்றியமையை கருத்தில் கொண்டு குறைந்த தண்டனையுடன் இவரை இயக்கத்தில் இருந்து நீக்கி செலவுக்கு பணமும் கொடுத்து அனுப்பினார். ஆனால் சிறீலங்கா தவிர்ந்த ஏனைய நாட்டில்தாலன் பரந்தாமன் ஐந்து ஆண்டுகள் இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
    3.வழுதியின் வேண்டுதலுக்கு இணங்க இவரை அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தார் தலைவர்...!?
    4.ஜெப்றி உதுமான் லெப்பை என்பவர் ஒரு கருணாவுடன் தொடர்புடைய கிழக்குமாகாண இஸ்லாமியத் தமிழர்.கொம்பியுற்றரர் பள்ளி வைத்திருக்கும் இவர் பரம புலிஎதிர்ப்பாளர். தென்புலோலியூர் கிருஸ்ணலிங்கம் என்பவர் கனடியத்தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் எனற வானொலியில் செய்தி படிக்கும் புலி எதிர்பாளர். இவர் இலங்கை போக்குவரத்து சபையில் இருந்தபோது மதுபோதையில் பெண்களுடன் தீய நடத்தையில் ஈடுபட்ட காரணத்தால் புலிகளால் தண்டிக்கப்பட்டவர்..?
    5.ஆக மக்களே..! தலைவர்..., துரோகி.?

    ReplyDelete